Jul 26, 2018

அதாஉல்லா எனும் நிகழ்கால தலைவன்

 ஒரு அரசியல் கட்சி என்பது பாரியதொரு நிலப்பரப்பையும் சமூகத்தையும் இணைத்து அந்த நிலப்பரப்பிற்கும் சமூகத்திற்கும் நன்மை பயக்கும் விடயங்களை செய்தலே அரசியல் கட்சிகளின் பணி

அக்கரைப்பற்றில் ஆசிரியராக பணிபுரிந்த காலப்பகுதிகளில் சமூகம் பற்றி சிந்தித்து அதற்காக செயற்பட எண்ணி அக்கரைப்பற்று பிரதேச அரசியல் தலைமைகளை எதிர்த்து அஷ்ரபுடன் இணைகிறார் ஏ.எல்.எம் அதாஉல்லா.

புலிப்பயங்கரவாதம் உச்சத்தில் இருந்த காலப்பகுதி அவர் சார்ந்த பிரதேசங்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் அதிகம் அதனை அதிகாரத்தில் இருந்துதான் செய்ய வேண்டும் அதற்கான பாசறை அஷ்ரபிடம் நிறையவே இருந்த காரணத்தினால் அவரை பின்தொடர்ந்தார் அவர்மூலம் மாகாணசபை, பாராளுமன்றம், அமைச்சுக்கள், கெபினற் அமைச்சுகள் போன்றவற்றை பிற்பட்ட காலப்பகுதியில் அவர் தன்வசம் ஆக்கிக் கொண்டாலும் தேசிய அரசியலுக்குள் அவரை முழுமையா கொண்டுவந்தது அஷ்ரப்தான்.

அஷ்ரபும் சேகு இஸ்ஸதீனை கவிழ்க்கவே அதாஉல்லாவை முதன்மைப்படுத்தினார் என்ற ஒரு கதையும் இருக்கிறது. இவற்றை தள்ளிவைத்துவிட்டு அதாஉல்லா அஷ்ரப் மரணித்த பிறகு பேரியல் அம்மையாரை ஓரங்கட் கட்சியின் பிரதி தலைவராக இருந்த ஹக்கீமை விடாப்பிடியாக தலைவராக்கினார். அவரும் அரியணை ஏறினார் எப்படி அஷ்ரப் அதாஉல்லாவை தேசிய அரசியலில் மிளிர செய்தாரோ அப்படி அதாஉல்லாவும் ஹக்கீமை மிளிர செய்ய நடவடிக்கை எடுத்தார். பிற்காலத்தில் அது ஜெயிக்காமல் போய் பேய்கதைகள் சொல்லி கட்சியை விட்டு விலகி தனிக் கட்சியொன்றை தொடங்க எத்தனித்தார்.

தனிக்கட்சி தொடங்க ஆரம்பித்த போது ரிசாத் பதியுதீன், பாயிஷ், ஹரீஸ், அன்வர் இஸ்மாயீல் போன்ற முக்கியஸ்தர்கள் அதாஉல்லாவுடன் இருந்தனர். ஏன் அதாஉல்லாவை விட்டு  அவர்கள் பிரிந்தனர் என்று அறியமுன் அதாஉல்லா என்ன போக்கில் இருந்தார் என்று நிறைய சிந்திக்க வேண்டும்.

தேசிய காங்கிரஸ் ஸ்தாபிக்கப்பட்டது, அதன் மூலம் பலர் அரசியலுக்குள் வந்தனர் பலர் விலகிச்சென்றனர். எப்படி மு.காவை விட்டு அதாஉல்லா விலகினாரோ அப்படியே அதாவை விட்டு அனைவரும் விலகினர் இறுதியில் உதுமாலெவ்வை மாத்திரம் மிஞ்சியிருக்கிறார்.


முன்னாள் அமைச்சர் அதாஉல்லா கடந்த பாராளுமன்ற தேர்தலில் தோற்றவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் உறவோடு இருப்பவர், ஓரே ஒரு உள்ளுராட்சி சபை மாத்திரம் தான் கைவசம் உள்ளது. பணபலம் குறைவு ஆள்பலம் இல்லை, அக்கரைப்பற்றை தவிர ஏனைய ஊர்கள் சப்போர்ட் இல்லை. இப்படி அடுக்கடுக்கான பிரச்சினைகள் தம் வசம் வைத்துள்ள அதாஉல்லாவும் அவர் கட்சியும் அடுத்த தேர்தலை முகம் கொடுப்பது பாரிய சவால். இதனை எவ்வாறு தடுக்கலாம் என்று சிந்திக்க வேண்டும்.

களியோடைக்கு அப்புறம் உள்ள அக்கரைப்பற்று கிராமங்களான ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, இறக்காமம், பொத்துவில் ஆகிய பிராந்தியங்களை தம்வசம் எடுக்க வேண்டும் அனைத்து சபைகளையும் தங்கள் கட்சி வசம் எடுக்க முயற்சி செய்ய வேண்டும். உள்ளுராட்சி மன்றங்கள் வசமாகிறபோது பல அரசியல் வெற்றிகள் வந்துசேரும்.

இந்த வெற்றிகளை கடந்த உள்ளுராட்சி மன்றத்தில் அவர் கண்டிருப்பார் அக்கரைப்பற்று மாநகர சபை, பிரதேச சபை அமோக வெற்றியும் அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தீர்மானிக்கும் சக்தியும் ஏனைய சபைகளில் ஆதிக்கமும் தேசிய காங்கிரஸ் அடைந்திருந்தது.

பஹத் ஏ.மஜீத்
பிரதம ஆசிரியர்
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post