அகமட் எஸ். முகைடீன்

ஈஸ்ட் டைம்ஸ் ஊடக வலயமைப்பின் 'த ஈஸ்ட் டைம்ஸ்' மாதாந்த தமிழ் மொழிமூல சஞ்சிகை வெளியீட்டு விழா அக்கரைப்பற்று ரி.எப்.சி மண்டபத்தில் இன்று (30) திங்கட்கிழமை மாலை ஈஸ்ட் டைம்ஸ் ஊடக வலயமைப்பின் ஸ்தாபக தலைவர் எம்.ஜே.எம். அன்வர் நௌசாத் தலைமையில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த சஞ்சிகையினை வெளியிட்டுவைத்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எல். தவம், திறைசேரி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் கலாநிதி எம். கோபாலரத்னம், கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றகீப், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல். அமானுல்லாஹ், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாசித், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ், சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் உள்ளிட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Share The News

Post A Comment: