சிலோன் முஸ்லிம் ஊடக நிறுவன முக்கியஸ்தருக்கு அச்சுறுத்தல் விடுத்த மயில்கட்சி பிரமுகர்இறக்காமம் முகவெத்திலை போல் காட்சி தருகின்ற இறக்காமம் குளத்தின் காணிகளை அடாத்தாக, அத்து மீறி சுவிகரிப்பு செய்கின்ற  செயற்பாடுகளை கண்டித்து ஊடகங்களில் செய்தி வெளியீட்ட எமது ஊடக நிறுவன முக்கியஸ்தரும் ஊடகவியலாளருமான தேசாபிமானி எஸ்.எம். சன்சீர் அவர்களை அகில் இலங்கை மக்கள் காங்கிரசின் இறக்காமம் பிரதேச அமைப்பாளர் ஏ.எஸ். முனாஸ், றிஸ்வான் ஆகியோர் அச்சுறுத்தல் செய்துள்ளனர்.

இது தொடர்பாக தமண பொலிஸில் முறைப்;பாடு செய்யப்பட்ட போது இரு தரப்பையும் அழைத்து தமன பொலிஸ் பொறுப்பதிகாரி முன்னிலையில் சமாதானம் செய்துவைக்கப்பட்டது,

இதுதவிர குறித்த நபர்கள் குறித்த ஊடாகவியளாலரின் வீட்டுக்கு சென்று மீண்டும் அச்சுறுத்தி அவரை தாக்க முற்பட்டுள்ளனர், இது கண்டிக்கதக்கது என குறிப்பிட்ட எமது நிருவாக பணிப்பாளர் குறித்த செயற்பாடுகளுக்கு ஊடக ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பலறை தாக்கப்பட்டுள்ள சிலோன் முஸ்லிம் ஊடக நிறுவனம், நடுநிலை வகுக்கும் காரணமே அனைத்திற்கும் முன்னிலையாக இருக்கிறது. எத்தடை வரினும் முஸ்லிம்களுக்கு சிறந்த செய்திகளை வழங்கும் ஓரே ஒரு நிறுவனமான எமது ஊடகம் திகழும் என செய்தியாசிரியர் குறிப்பிட்டார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...