( நீர்கொழும்பு முஸாதிக் முஜீப் )

நீர்கொழும்பு அல் ஹிலால் மத்திய கல்லூரி பழைய மாணாவிகள் சங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில்   சுய தொழில் முயற்சிகளை மேம்படுத்துவதை மையமாகக் கொண்டு நடாத்தப்பட்ட  கேக் அலங்காரம்,சமையல்,கை எம்பிராய்டரி மற்றும் ஆடை தயாரித்தல் போன்ற பாட நெறியை நிறைவு செய்த மாணவிகளின் திறமைக் கண்காட்சியும் பரிசழிப்பு விழாவும் கடந்த சனி மற்றும் ஞாயிறு (11.08.2018 & 12.08.2018) தினங்களில் நீர்கொழும்பு  ஜாபிர் நினைவக மண்டபத்தில் நடந்தேறியது.

இதில் நீர்கொழும்பு அல் ஹிலால் மத்திய கல்லூரி பழைய மாணாவிகள் சங்கத்திலிருந்து தகுதிவாய்ந்த மற்றும் அனுபவமிக்க பயிற்றுவிப்பாளர்களைக் கொண்டு செயற்பட்டது. சுமார் 6 மாத காலமாக இடம்பெற்ற இப் பாட நெறி கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவுக்கு வந்தது.

இதற்கு தலைமை விருந்தினரும் கௌரவ விருந்தினருமாக சமூக சேவையாளர்கள் மற்றும் வல்லுநர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதன் போது கேக் அலங்காரம்,சமையல்,கை எம்பிராய்டரி மற்றும் ஆடை தயாரித்தல் போன்ற பாட நெறியில் மாணவிகள் தத்தமது திறமைகளை வெளிக்காட்டியிருந்தார்கள். 50 மாணவிகளில் 23 மாணவர்களுக்கு அவர்களின் செயல்திறன் அடிப்படையில் கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

இக் கண்காட்சிக்கு 700 முதல் 1000 வரையானோர் பார்வையிட சமூகமளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது...


Share The News

Post A Comment: