சிலோன் முஸ்லிம் இணைய செய்தி ஊடக நிறுவனத்தின் 6வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு பல்வேறுபட்ட நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது, அதனடிப்படையில் அல்குர்ஆன் மதர்சாக்களுக்கு குல்ஆன் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக அட்டாளைச்சேனை 01ல் அமைந்துள்ள மத்ரசதுல் மதீனா அரபு  மத்ரசாவுக்கு அல்குர்ஆன் பிரதிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது, இந்நிகழ்வில் சிலோன் முஸ்லிம் ஸ்தாபகர் பஹத் ஏ.மஜீத், சிலோன் முஸ்லிம் ஊடக அலுவலக செயற்பாட்டாளர் குல்சான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒரு தொகை அல்குர்ஆன் பிரதிகள் கல்லுாரியின் அதிபர் பரீஸ் அவர்களுக்கு சிலோன் முஸ்லிம் ஸ்தாபகர் பஹத் ஏ.மஜீத் வழங்கிவைப்பதையும், சிலோன் முஸ்லிம் ஊடக அலுவலக செயற்பாட்டாளர் குல்சான் மாணவர்களுக்கு வழங்கிவைப்பதையும் மாணவர்கள் அமர்ந்திருப்பதையும் படங்களில் காணலாம்.

#The Ceylon Muslim Internet Company Company completed 6th year!

Share The News

Post A Comment: