ஹஸ்பர் ஏ ஹலீம்


கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம நாளை (06) தனது 64 ஆவது பிறந்த நாளை கொண்டாடவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனரின் ஊடகச் செயலாளர் ஹஸன் அலால்தீன் தெரிவித்தார்.1954 ல் குருநாகலில் பிறந்த கிழக்கு ஆளுனர் முன்னால் வெளிவிவகார அமைச்சராகவும், வர்த்தக வாணிப கைத்தொழில் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.தனது பிறந்த தினத்தை முன்னிட்டு விசேட மதவழிபாடுகளும் இடம்பெறவுள்ளன. குறித்த விசேட பூஜை மட்டக்களப்பு மாமாங்க கோயிலில் காலை 8.00 மணியளவிலும் அதனை தொடர்ந்து  சேருவில  விகாரையிலும் மத அனுஷ்டானங்களும் இடம்பெறவுள்ளதாக கிழக்கு ஆளுனரின் ஊடகப் பிரிவு மேலும் தெரிவிக்கிறது.

Share The News

Post A Comment: