சாய்ந்தமருது சிலோன் முஸ்லிம் நிருபர்

முஸ்லிம்காங்கிரஸ் கட்சியை தலைமை தாங்கும் திறன் பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அவர்களுக்கு உள்ளதாக முஸ்லி்ம் உரிமைகள் மற்றும் நில காப்பக பிரிவுகள் சம்பந்தமாக செயற்பாடுகளை செய்துவரும் கிழக்கு புத்திஜீவிகள் அமைப்பு  கருத்துரைத்துள்ளது.

அமைப்பின் மாதாந்த கூட்டம் இ்று சாய்ந்தமருது கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற போது இந்த விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட மக்களின் நிலப்பிரச்சினை தொடர்பிலும் அதீத அபிவிருத்தி தொடர்பிலும் அதிக கவனம் செலுத்திவரும் பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அவர்கள் அம்பாறைக்கு கிடைத்த அரும்பொக்கிஷம் என அமைப்பின் பொதுச் செயலாளர் அஷ்ஷேய்க் இஸ்பான் இஸ்லாஹி குறிப்பிட்டுள்ளார்,

இன்று முஸ்லிம் காங்கிரஸ் தலைமை புதியவர்களை உள்வாங்கி புதிய தலைமைகளை உருவாக்க வேண்டும் அதற்கான முயற்சிளையாவது எடுக்க வேண்டும் அத்துடன் புத்திஜீகள் கருத்துக்களை ஏற்று நடக்க வேண்டும் என்றார்.

Share The News

Post A Comment: