ஈரான் நாட்டின் வெளிவிவகார அமைச்சரை பிரதி அமைச்சர் ஹரீஸ் விமான நிலையத்தில் வரவேற்றார்.


அகமட் எஸ். முகைடீன்

ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவசரமாக சந்திப்பதற்காக இன்று (31) இலங்கை வருகை தந்த ஈரான் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் முஹம்மட் ஐவாட் சரீபை அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கொழும்பு பண்டாரநாயக சர்வதேச ஞபகார்த்த விமான நிலையத்தில் வைத்து வரவேற்ரார்.

ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வேண்டுகோளுக்கு அமைவாகவே பிரதி அமைச்சர் ஹரீஸ் விமான நிலையம் சென்று அரசு சார்பாக குறித்த வரவேற்பை வழங்கினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...