தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Aug 23, 2018

ஞானசாரவுக்காக ஜனாதிபதியுடன் மன்றாடவுள்ள நல்லாட்சியின் அமைச்சர்


கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனை தொடர்பில்,தாம் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையில் கலந்துரையாடவுள்ளதாக, அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனா அமைப்பின் பிரதிநிதிகள் புத்தசாசன அமைச்சுக்கு சென்று கலந்துரையாடிய போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரருக்கு விடுதலை பெற்றுக்கொடுப்பது தொடர்பில், புத்தசாசன அமைச்சினால் மேற்கொள்ள வேண்டிய அனைத்து செயற்பாடுகளையும் தாம் முன்னெடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எப்​போதும் மத மற்றும் தேசிய நிகழ்வுகளுக்கு தாம் ஒத்துழைப்பு வழங்குவதாகவும், அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages