ஜெனீவாவில் இருந்து அப்துல் சமட்

முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் முஸ்லிம்களின் காணிகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்திவருகின்ற ஒருவருமான ஏ.எல். தவம் இலங்கை புலனாய்வு பிரிவினரால் விசாரிக்கப்பட்டது மிகவும் வேதனைக்குரிய விடயம் என மனித உரிமைகள், ஊடக சுதந்திரத்தை காப்பதற்கான இலங்கை முஸ்லிம்களின் அமைப்பின் தலைவரும் நிர்வாக செயலாளரும் செயற்பாட்டாளருமான ஆசுக் றிம்ஜான் குறிப்பிட்டுள்ளார்.

நிலம் (காணி) என்பது மனித உரிமையில் முக்கிய விடயமாகும், அதனை கேட்பது பிழை எனும் நாட்டில் வசிப்பதே கேள்விக்குறியாகும் அப்படித்தான் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் பூர்வீக காணிப்பிரச்சினை, 35000 ஏக்கர் காணிகளை இழந்துள்ள இம் மக்களுக்காக உழைக்கும் ஒரு பிரமுகருக்கு மூடிய அறைக்குள் விசாரணை செய்வதை நாம் கண்டிக்கிறோம் இது தொடர்பில் ஐ.நாவின் 39வது அமர்வில் பேசுவோம், முன்னர் தமிழர்களுக்கு செய்தது போல இன்று முஸ்லிம்களுக்கு இந்த அரசு செய்கிறது.

அரச காணி என திட்டமிட்டு முஸ்லிம்களின் பூர்வீக காணிகள் சுவீகரிக்கப்படுகிறது, இதனை முற்றாக முஸ்லிம் சமூகம் எதிர்க்க வேண்டும், இது தொடர்பில் சர்வதேச மட்டங்களுக்கு நாம் எடுத்துச் சொல்லுவோம் என்றார்.

மனித உரிமைகள், ஊடக சுதந்திரத்தை காப்பதற்கான இலங்கை முஸ்லிம்களின் அமைப்பின் ஜெனீவா அமர்வில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே இவர் இந்த விடயம் தொடர்பில் பேசினார்.Share The News

Post A Comment: