நிறமூட்டப்பட்ட மற்றும் தரமில்லாத பருப்பு வகைகள், தற்போது சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றமை தெரியவந்துள்ளதாக, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
கம்பஹா, இரத்தினபுரி மாவட்டங்கள் உள்ளிட்ட பல பிரதேசங்களில் இவ்வாறான தரமற்ற மற்றும் நிறமூட்டப்பட்ட பருப்பு வகைள் விற்பனை செய்யப்படுகின்றமை தெரியவந்துள்ளது.
இந்த பருப்பை கழுவும் போது நீர் சிவப்பு நிறமாக மாறும். இந்தப் பருப்பு மிகவும் சிறியதாகும்.
இந்தப் பருப்பை வேகவைக்க, வழமையை விட கூடுதலான நேரம் எடுக்கும் என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது பற்றி மக்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். இவ்வாறான பருப்பு வகைகள் தொடர்பாக, பிரதேசத்தில் உள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு உடனடியாக முறைப்பாடுகளைத் தெரிவிக்க முடியும் என்றும் சங்கம் பொதுமக்களைப் பணித்துள்ளது.