Aug 1, 2018

பொலன்னறுவை புதூர் முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தில் கட்டிடம் திறந்து வைப்பு




R.ஹஸான்



எழுச்சிபெறும் பொலன்னறுவை’ செயற்திட்டத்தின் கீழ் பொலன்னறுவை புதூர் முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தில் பதினாறு மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி வகுப்பறைக் கட்டிடம் இன்று புதன்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய 6ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் ‘எழுச்சிபெறும் பொலன்னறுவை’ செயற்திட்டத்தின் கீழ் 180 வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. அத்திட்டத்தின் ஊடாக பொலன்னறுவை  புதூர் முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டிடம் இன்று புதன்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ஹரிஸன் மற்றும் ஜனாதிபதியின் விசேட அழைப்பின் பேரில் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் கலந்து கட்டிடத்தை திறந்து வைத்தனர். 

Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post