உதுமாலெவ்வை ஒருபோதும் கட்சிதாவமாட்டார் - தலைவர் அதாஉல்லா திடம்!நுஸ்கி

முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும், தேசிய காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபக முக்கியஸ்தருமான எம்.எஸ் உதுமாலெவ்வை தொடர்பில் கடந்த சில நாட்களாக பல புரளி செய்திகள் பரவி வருகிறது இது குறித்து எமது அக்கரைப்பற்று செய்தியாளருக்கு பதிலளித்த கட்சியின் தலைவர் அதாஉல்லா,

நான் எவ்வாறு மர்ஹூம் அஸ்ரபிற்கு நம்பிக்கையாக இருந்தேனுா அதைவிட ஒருபடிமேல் உதுமாலெவ்வை என்னோடு உள்ளார், உண்மைகளை பொய்யாக்க பலர் முயற்சிக்கின்றனர், உதுலெவ்வை பதவிகளுக்கு ஆசைப்பட்டவர் அல்ல, அவர் விசுவாசமிக்க எனது நம்பிக்கை தோழர் அவர் ஒருபோதும் என்னைவிட்டு பிரியமாட்டார் என்றார். அவரை தேசிய காங்கிரஸ் பலபதவிகள் கொண்டு அழகு பார்த்தது இன்னும் அப்படியே பார்க்கும் என்றார்


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...