பாறுக் ஷிஹான்


யாழ். வலிகாமம் பகுதியில் சிறுபோக வெங்காயச் செய்கையில் விவசாயிகள் அதிகளவு ஆர்வம் காட்டி வருகின்றனர்.


யாழ்.வலிகாமத்தில் ஏழாலை, குப்பிளான், குரும்பசிட்டி, வயாவிளான், ஈவினை, புன்னாலைக் கட்டுவன், மயிலங்காடு, சூராவத்தை, சுன்னாகம், மருதனார்மடம், இணுவில்,உடுவில், தெல்லிப்பழை, கட்டுவன், அளவெட்டி, மல்லாகம், ஊரெழு, உரும்பிராய், நீர்வேலி, இருபாலை, கோப்பாய்,கோண்டாவில், புத்தூர்,நவக்கிரி, சிறுப்பிட்டி ஆகிய பகுதிகளிலுள்ள விவசாயிகள் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப் பகுதியில் வெங்காயச் செய்கையில் ஆர்வம் காட்டியுள்ளனர்.


சிறுபோகச் செய்கையில் முதல் கட்டமாகக் கடந்த சித்திரை மாதம் பயிரிடப்பட்ட வெங்காயச் செய்கை அறுவடை பூர்த்தியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது சிறுபோக வெங்காயச் செய்கையின் இரண்டாம் கட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.


கடந்த சித்திரை மாதம் வெங்காயச் செய்கையில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் கடும் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளனர். கடும் வெப்பமுடனான காலநிலை மத்தியில் திடீரெனப் பெய்த கடும் மழையால் வெங்காயச் செய்கை பெரும்பாலும் அழிந்து போனமையே இதற்குக் காரணம்.


இதேவேளை, இரண்டாம் கட்டமாகச் சிறுபோக வெங்காயச் செய்கையில் விவசாயிகள் விதை வெங்காயத்தின் விலை அதிகரிப்பால் கடுமையான பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Share The News

Post A Comment: