தேசிய பாடசாலை தரமுயர்வுக்கு காரண கர்த்தாவான தௌபீக் எம்.பி கௌரவிக்கப்பட்டார்
ஹஸ்பர் ஏ ஹலீம்


கிண்ணியா அல் அக்ஸா கல்லூரி தேசிய பாடசாலையாக கல்வி அமைச்சினால் தரமுயர்த்தப்பட்டதை அடுத்து இன்று (02) மாலை கிண்ணியா அல் அக்ஸா தேசிய பாடசாலையின் தரமுயர்வுக்கு காரணமாக இருந்த திருகோணமலை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை வளாகத்தில் அணிபர் திரு சலீம் தலைமையில் இடம் பெற்றது. அண்மையில் கல்வி அமைச்சினால் இப் பாடசாலை தேசிய பாடசாலையாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்களின் முயற்சியை பாராட்டி கௌரவிப்பு விழா நடைபெற்றது .இக் கௌரவிப்பு விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் கிண்ணியா பிரதான பாடசாலை வீதியின் முன் இருந்து இசை வாத்தியத்துடன் வெகு விமர்சையாக மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.தேசிய பாடசாலை என்பது எனது முயற்சியினால் தான் கொண்டு வரப்பட்டது இப்பாடசாலையை கல்வியின் முன்னேற்றம் கருதி வேறு எந்த சக்திகளின் துனை இல்லாமல் தனி முயற்சியாக செயற்பட்டு பாடசாலை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டிருக்கிறது.கல்வியிலும் விளையாட்டிலும் தேசியம் தொடக்கம் சர்வதேசம் வரை சாதனை படைக்க வேண்டும் எமது மாணவர்கள் என்பதும் பாடசாலையின் தரமுயர்வுக்கு காரணமாக இருக்கிறது என்று கௌரவிப்பு நிகழ்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.மேலும் இவ் நிகழ்வில் கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி முனவ்வரா நளீம்,கிண்ணியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கபில கால்லகே,ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் கிண்ணியா நகர பிரதேச சபை உறுப்பினர்கள்,பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பெற்றார்கள்,மாணவர்கள்,ஆசிரியர்கள் என பலரும் பங்கேற்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்