கண்டி நஷ்டயீட்டை துரிதமாக வழங்குக அதிகாரிகளுக்கு பிரதமர் ரணில் பணிப்பு

கடந்த மார்ச் மாதம் கண்டி மற்றும் திகன பகுதிகளில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கெதிரான வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட சொத்துகளுக்கான நஷ்ட ஈடுகளை காலதாமதப்படுத்தாது உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் ரணில் விக்ரமசிங்க புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, மீள்குடியெற்ற அமைச்சரை வேண்டியுள்ளார்.

இதனையடுத்து கண்டி மற்றும் திகன வன்செயல்கள் தொடர்பான புனர்வாழ்வு அதிகார சபையின் இதுகாலவரையிலான நடவடிக்கைகள் மீளாய்வு தொடர்பான கலந்துரையாடலொன்று எதிர்வரும் 6ஆம் திகதி 10மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய  தலைமையில் கண்டி மகாவலி ரீச் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

இந்த மீளாய்வு கூட்டத்தில் கண்டி மற்றும் திகன வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட சொத்துக்கள், இதுவரை வழங்கப்பட்டுள்ள நஷ்ட ஈடுகள், நஷ்ட ஈடுகள் வழங்கப்பட வேண்டியுள்ள சொத்துக்கள் மற்றும் இதுவரை நஷ்டஈடுகள் வழங்குவதற்குத் தடையாக உள்ள காரணிகள் என்பன ஆராயப்படவுள்ளது.

5இலட்சத்துக்கு மேற்பட்ட நஷ்டஈடுகளுக்கு உரித்தான சொத்துக்களுக்கே இதுவரை நஷ்டஈடு வழங்கப்கடவில்லை. இதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. 5இலட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. இவற்றில் 60விண்ணப்பங்கள் தேவயான ஆவணங்களுடன் புாரணப்படுத்தப்பட்டுள்ளது.

இவற்றில் 13சொத்துகளின் முழுமையான மதிப்பீட்டு அறிக்கையை மதிப்பீட்டு திணைக்களம் அனுப்பி வைக்கவில்லை. பகுதியளவிலேயே மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. திணைக்களத்தினால் முழுமையான மதிப்பீட்டினை செய்ய முடியாதுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

18செத்துக்களின் மதிப்பீட்டு அறிக்கை இதுவரை எம்மை வந்து சேரவில்லை. இதனாலேயே தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த விபரங்களை எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ள நஷ்டஈடு தொடர்பான மீளாய்வு கலந்துரையாடலில் சமர்ப்பிக்கவுள்ளோம். புனர்வாழ்வு அதிகார சபை நஷ்டஈடுகளை வழங்குவதற்கு தயார் நிலையிலேயே உள்ளது. ஆனால், சில குறைபாடுகள் காரணமாகவே தாமதமேற்படுகிறது’   என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்