திருகோணமலையில் உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பிணர்களுக்கான செயலமர்வு
ஹஸ்பர் ஏ ஹலீம்


திருகோணமலை மாவட்ட  உள்ளூராட்சி மன்ற பெண்கள் உருப்பினர்களுக்கான இயல்திறனை கட்டியெழுப்பும் நிகழ்ச்சி திட்டம் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான  மக்கள் இயக்கத்தினால்(caffe) திருகோணமலை மாவட்ட  சர்வோதய கேட்போர் கூடத்தில்  நேற்று (03) வெள்ளிக் கிழமை நடைபெற்றது

.திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 13 உள்ளூராட்சி மன்றங்கள் காணப்படுகின்ற அதேவேலை பெண்கள் உறுப்பினர்கள் குறித்த செயலமர்வில் பங்கேற்றனர் நகர சபை,பிரதேச சபைகளைக் கொண்ட உறுப்பினர்கள் தங்களது ஆளுமைத் திறன்கள், மக்கள் தொடர்பாடல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் வளங்களை இணங்கண்டு வருமானத்தை தேடும் வழி முறைகள் மேற்கொண்டு மக்களுடைய விடயங்களில் கவனம் செலுத்துதல் தொடர்பிலும் விரிவுரைகள் வழங்கப்பட்டன வளவாளர்களாக மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் செயற்பட்டார் .

 இதில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை. சலீம்,முன்னால் உதவி தேர்தல் ஆணையாளர் பண்டார மாப்பா, கபே அமைப்பின் தேசிய அமைப்பாளர் மனாஸ் மக்கீன்,கபே அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் ஆர்.எம்.றாபில் மற்றும் திருமலை மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்