பாணந்­துறை  வாதுவை  பிர­தே­சத்­தி­லுள்ள  சுற்­றுலா   விடு­தியில் களி­யாட்ட நிகழ்வில்  கலந்­து­கொண்டு சுக­வீனமுற்று நால்வர் உயி­ரி­ழந்த சம்­பவம் தொடர்பில் என் மீதும்  சிலர்  பொய்க்­குற்றம் சுமத்­து­கி­றார்கள். நான் போதைப் பொருட்­க­ளுக்கு எதி­ரா­னவன். எதி­ராக  சட்ட நட­வ­டிக்கை   எடுக்­கும்­படி  பொலி­ஸாரை  வேண்­டு­பவன் என அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும், சுகா­தாரம் போசணை  மற்றும் சுதேச  மருத்­துவ அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.
தகவல் திணைக்­க­ளத்தின் கேட்போர் கூடத்தில்  இடம்­பெற்ற  ஊடாக  மாநாட்டில்  கலந்­து­கொண்டு ஊட­க­வி­ய­லா­ளர்­களின்  கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளிக்­கை­யிலே  அவர் இவ்­வாறு  கூறினார்.  அவர் தொடர்ந்தும்  பதி­ல­ளிக்­கையில் ‘சுற்­றுலா விடு­தியில்  நடை­பெற்ற  களி­யாட்ட நிகழ்­வுக்கு  கடந்த  ஜூன்  மாதம் 21  ஆம் திக­தியே  பொலிஸ்   நிலைய பொறுப்­ப­தி­கா­ரி­யினால்  அனு­ம­திப்­பத்­திரம்  வழங்­கப்­பட்­டுள்­ளது.  அவ­ருக்­கெ­தி­ராக  பல குற்­றச்­சாட்­டுகள்  இருந்­தன. அதனால்  அவரை இட­மாற்றம்  செய்தேன்
அப்­போது  பலர்  குரு­மார்கள்  உட்­பட  இட­மாற்­றத்தை ரத்­துச்­செய்­யு­மாறு  கோரி­னார்கள். நான் மறுத்­த­துடன்  இது­தொ­டர்­பாக  பொலிஸ்மா  அதி­ப­ரிடம்   கோரிக்கை  விடு­மாறு  தெரி­வித்தேன்.
நான் எந்த அனு­ம­தி­யைப்­பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கும் பொலிஸ்  அதி­கா­ரி­களைத் தொடர்பு கொள்­வ­தில்லை.  பொலிஸ் நிலை­யத்தில் தான் செய்த முறைப்­பாடு விசா­ரிக்­கப்­ப­ட­வில்லை என்று  எவ­ரா­வது  முறை­யிட்டால் நான்  சம்­பந்­தப்­பட்ட பொலிஸ்  நிலை­யத்தை  தொடர்பு கொண்டு விசா­ரிப்பேன்.  அவர்கள் நியா­ய­மான  கார­ணங்கள் கூறினால் ஏற்­றுக்­கொள்வேன் என்றார்.
இச்­சம்­பவம் தொடர்­பான  விசா­ர­ணை­களில் நீங்கள்  தலை­யி­டு­வ­தாக  குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்கப் பட்­டுள்­ள­னவே? என்ற ஊட­க­வி­ய­லா­ளர்­களின்  கேள்­வி­க­ளுக்கு  அமைச்சர் பதி­ல­ளிக்­கையில் ‘நான்  நேர்­மை­யான அர­சியல்  செய்­பவன். பொய்க்  குற்றச் சாட்­டு­க­ளுக்கு  நான் பயப்­ப­டப்­போ­வ­தில்லை. சுய­ந­ல­வாத  அர­சி­யல்­வா­தி­களின் குற்­றச்­சாட்­டுக்­களை  நான் எதிர்க்­கிறேன்.
களி­யாட்ட  நிகழ்­வொன்று  நடந்தால் போதைப்­பொருள்   பாவிப்­ப­வர்கள் அதைப்­பா­விப்­பார்கள். மதுபானம்  அருந்துபவர்கள்  அருந்துவார்கள்.  இதை  இலங்கையில்  இல்லாமற்  செய்ய முடியுமா? இவ்வாறான  களியாட்ட நிகழ்வுகள் இடம் பெறும்போது பொலிஸார்  பாதுகாப்புக்  கடமையில்  ஈடுபடுத்தப்பட வேண்டும்  என்றார்.

Share The News

Post A Comment: