கண்டி பெரஹராவும் முஸ்லிம் முன்னோர்களின் பங்களிப்பும்முபிஸால் அபூ­பக்கர்
முது­நிலை விரி­வு­ரை­யாளர்
மெய்­யியல் துறை
பேரா­த­னைப்­பல்­க­லைக்­க­ழகம்
mufizal77@gmail.com.
இலங்­கையில் வாழும் பௌத்­தர்­களின் இத­ய­மாக இருப்­பது, கண்டி நகரும் அங்­குள்ள தலதா மாளி­கை­யு­மாகும். வரு­டாந்தம் பெர­ஹ­ராவும் ஏனைய உற்­ச­வங்­களும் இடம்­பெ­று­வ­துடன் முக்­கிய தீர்­மா­னங்­க­ளிலும், நிகழ்­வு­க­ளிலும்  செல்­வாக்கு செலுத்தும் இட­மா­கவும் காணப்­ப­டு­கின்­றது.
இது ஓர் இனம் சார்ந்த மக்­களின் முதுசம் அல்ல. மாறாக இத்­தே­சத்தில் வாழும் அனைத்து இன மக்­க­ளி­னதும் மர­பார்ந்த இட­மாகும். ஏனெனில், கண்டி தலதா மாளிகை எனும்­போது பலரும் அதனை பௌத்­தர்­களின் புனித இடம் என்ற அடிப்­ப­டையில் மட்­டுமே நோக்­கு­கின்­றனர். ஆனால், இலங்­கையின்  சுதந்­தி­ரத்­திற்கு முந்­திய  கால­னித்­து­வத்­தி­லி­ருந்து  சுதந்­திரம் உரு­வாக்­கு­வ­தற்­காக அனைத்­தின சுதந்­திரப் போரா­ளி­களும் ஒன்­றி­ணைந்து போரா­டிய ஒரு முக்­கிய இட­மா­கவும், இன உற­வுக்­கான பல வர­லாற்றுச் சம்­ப­வங்கள் இடம்­பெற்ற  இட­மா­கவும், கண்­டியும் அங்கு அமைந்­துள்ள தல­தா­மா­ளி­கையும் முக்­கி­யம்­பெ­று­கின்­றன. இந்த வகையில் கண்­டிய முஸ்லிம் மக்­க­ளுக்கும், இப்­பி­ர­தே­சத்தின் சிங்­கள  பிர­தான பன்­ச­லை­க­ளுக்கும் இருந்த இணைப்பின்  ஒரு­சில  பகு­தி­களை இப்­ப­திவு ஆராய்­கின்­றது..
கண்­டியின் அமை­விடம்
இந்­நகர் "மலை­களின் நக­ராக" இருப்­ப­தனால் இதன்  பாது­காப்பு சிறப்­பா­ன­தாக இருப்­பினும், இப்­பி­ர­தே­சத்­தி­லி­ருந்து நாட்டின் ஏனைய பிர­தே­சங்­க­ளு­ட­னான  தொடர்பு மிகக் கடி­ன­மா­ன­தாக இருந்­தது.
மன்­னர்­களின் காலத்தில், மத்­திய பிர­தே­ச­மான  கண்­டியின் உற்­பத்­தி­களை, நாட்டின் ஏனைய பகு­தி­க­ளுக்கு கொண்டு செல்­வ­தற்­கான பிர­தான போக்­கு­வ­ரத்து "தவ­லம" என்ற பெயரில் முஸ்­லிம்­க­ளி­டமே இருந்­துள்­ளது மட்­டு­மல்ல, பிர­தே­சத்­திற்குத் தேவை­யான உடு­பொ­ருட்கள்., கரு­வாடு, உப்பு போன்ற பொருட்­க­ளையும் நாட்டின் கரை­யோ­ரங்­க­ளி­லி­ருந்து கொண்டு வந்து தேவை­யான இடங்­க­ளிற்கு சேர்த்த பணி­யையும், முஸ்லிம் வர்த்­த­கர்­களே மேற்­கொண்டு உத­வி­யுள்­ளனர்.
சமய உறவு நிலை
கண்டி பெர­ஹ­ராவின் போதும், ஏனைய நாட்­க­ளிலும். விகா­ரை­க­ளுக்­கான உப்பு, தேங்காய் மற்றும், ஏனைய அத்­தி­யா­வ­சியப் பொருட்­களை  வணிக ரீதி­யிலும் நன்­கொ­டை­யா­கவும், முஸ்­லிம்கள்  வழங்கி வந்­துள்­ளனர். மட்­டு­மல்ல, அக்­கால விகா­ரை­க­ளுக்குப் பொறுப்­பான  பிக்­கு­க­ளுடன் சிறந்த உற­வி­னையும்  கொண்­டி­ருந்­தனர்,
சிங்­கள வர­லாற்­றா­சி­ரி­யர்­களின் கருத்­துப்­படி  தலதா மாளி­கையின் "தெப்ப குளக்­கட்­டு­மானப் பணி­களை தேவேந்­திர மூலாச்­சாரி மேற்­கொண்­ட­போது, அதனை சிறப்­பாக  முடித்­தது  முஸ்லிம் ஒப்­பந்­தக்காரர்  ஒரு­வரே என்ற வர­லாற்று வாய்­வழிக் கதை­களும் உண்டு. அதேபோல் பெர­ஹ­ரா­வுக்­கான  யானை கிழக்கு மாகாண  ஏறா­வூரை சேர்ந்த பணிக்­க­னா­ரா­லேயே வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அதற்­கான ஆதா­ர­மாக அந்த யானையும் அவை­பற்­றிய தமிழ் குறிப்­புக்­களும், இன்றும் மாளி­கா­வையின் மேற்குப் புறத்­தே­யுள்ள தனிக் கட்­ட­டத்தில் பாது­காக்­கப்­பட்டு வரு­கின்­றன.
அதேபோல் கண்டி உடு­நு­வரப் பிர­தே­சத்­தி­லுள்ள "எம்­பக்க" தேவா­ல­யத்தின் நிர்­மாணம், அதன் நிர்­வாகப் பரா­ம­ரிப்பு, பெர­ஹரா போன்ற பல பணி­களில் முஸ்லிம் தலை­வர்­களும், மக்­களும் அதிக பங்­க­ளிப்பை வழங்கி வந்­தி­ருக்­கின்­றனர். தொடர்­பு­களை நினை­வு­ப­டுத்­து­மு­க­மாக அக்­கால அர­சர்­களால் பல பரிசுப் பொருட்­களும், நினைவுச் சின்­னங்­களும் வழங்­கப்­பட்­டுள்­ளன,
உதா­ர­ண­மாக, புத்­த­ளத்தைச் சேர்ந்த முஸ்­லிம்கள் பெர­ஹரா தேவை­க­ளுக்கு தேங்காய் மற்றும் கொப்­பறா, மட்டை போன்­ற­வற்றை வழங்­கி­ய­தற்­காக செனரத் மன்­னனால் வழங்­கப்­பட்ட நினைவுச் சின்­னத்தை புத்­தளம் பெரிய பள்­ளியில் இன்றும் காண­மு­டியும்.
அதேபோல் அரச மாளி­கையில் இடம்­பெற்ற விருந்­து­க­ளுக்­கான பிர­தான சமை­யற்­கா­ரர்­க­ளா­கவும், கணக்­க­றிக்­கை­ எ­ழுதும் கணக்­கா­ளர்­க­ளா­கவும், பிர­தான அரச மருத்­து­வர்­க­ளா­கவும் முஸ்­லிம்­களே நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­த­தாக, தலதா மாளி­கையில் உள்ள ஓலைச் சுவ­டி­க­ளிலும், பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் நூல­கத்­தி­லுள்ள சுவ­டி­க­ளிலும் குறிப்­புகள் காணப்­ப­டு­கின்­றன.
காணிப் பரி­மாற்றம்
மன்­னர்கள் காலத்தில் நிலம் தொடர்­பான அணு­கு­மு­றையும், பங்­கீடும் பிர­தான வழி­களில் காணப்­பட்­டன,
1. கப­டா­கம
2.தேவா­ல­கம
3. நிந்­த­கம
இந்­த­வ­கை­ய­றைக்கு ஏற்­பவே நிலங்கள் பிரித்து வழங்­கப்­பட்­டன. அதன்­படி நிலத்­தினைப் பெற்­ற­வர்கள், பன்­ச­லைக்கும், மன்­ன­னுக்கும் விசு­வா­ச­மா­கவும், சில தெரி­வு­செய்­யப்­பட்ட பணி­களைப் புரி­வோ­ரா­கவும் இருக்­கு­மாறும் கட்­டளை இடப்­பட்­டி­ருந்­தது, கட்­ட­ளைப்­ப­டியும், தமது விருப்­பின்­ப­டியும் அங்கு வாழ்ந்த மக்கள் அக்­க­ட­மை­களை நிறை­வேற்­றினர்.
நம்­பிக்­கையும் விசு­வா­சமும்
கீர்த்­திஸ்ரீ ராஜ­சிங்க மன்­னனின் ஆட்­சிக்­கா­லத்தில்,  மன்­னனை அர­சாட்­சி­யி­லி­ருந்து வீழ்த்­து­வ­தற்­கான சதித்­திட்­டத்தை உள்ளூர் புரட்­சிக்­கா­ரர்­க­ளுடன் இணைந்து பிக்­குமார் மேற்­கொள்ளத் தீர்­மா­னித்­தனர், அதன்­படி மல்­வத்து விகா­ரையில் இடம்­பெறும் பூஜைக்கு அர­சனை பிர­தம அதி­தி­யாக அழைத்து, அவன் அமரும் ஆச­னத்தின் கீழே ஒரு குழியைத் தோண்டி வீழ்த்­து­வ­தற்­கான திட்டம் தீட்­டப்­பட்­டது. குறித்த நிகழ்­வுக்கு அரசன் வரு­கை­தரும் போது வழியில் அவனைச் சந்­தித்து சதித்­திட்டம் தொடர்­பாக விளக்­கிக்­கூறி அவனை அதி­லி­ருந்து காப்­பாற்­றி­யது,  'கோபால முத­லியார்'  என்ற இந்­திய வழி முஸ்லிம் அதி­காரம் என்ற குறிப்­புக்­களும் உள்­ளன. பின்னர் அரசன் அதற்­கான நன்­றிக்­க­ட­னாக பல பிர­தே­சங்­களை வழங்­கி­ய­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றது.
ஆதா­ரங்­க­ளுக்­கான சான்­றுகள்
இது­தொ­டர்­பான வர­லாற்று  ஆதா­ரங்­களின் ஒரு­சில விப­ரங்­களை "ஸ்ரீ ராஜாதி ராஜ­சிங்க" (1782- – 1798) மன்­னனின் ஆசா­னா­கவும், ஆலோ­ச­க­ரா­க­வு­மி­ருந்து அவனை வழி­ந­டத்­திய " மொறத்­தொட்ட தம்ம கந்­த­தேரர்"   அக்­கா­லத்தில் அன்­றாடம் தாம் எழுதி வைத்­தி­ருந்த "டயறிக்  குறிப்­புக்கள்" இக்­கு­றிப்­புக்­களின் ஒரு பகுதி பின்னர் நூலா­கவும் சிங்­கள எழுத்­தாளர் டய­கம என்­ப­வரால் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது...
இதன்­படி அக்­கா­லத்தில் கொலஸ்­டல என அழைக்­கப்­பட்ட மஹி­யங்­கன மற்றும் தெல்­தெ­னிய மரக்­கல மினிஸ்ஸு, பன்­சல வுக்கு உப்பு தரு­வ­தா­கவும், பன்­ச­ல­வுக்கு சொந்­த­மான காணி­க­ளையும், பயிர்­க­ளையும் பாது­காத்து தந்­த­தா­கவும்  தனது குறிப்­புக்­களில் குறிப்­பி­டு­கின்றார்..
இன்னும் பங்­கொல்ல மடம் என்ற இடத்தில் வாழ்ந்த 'மரக்­கல மினிஸ்ஸு' அதா­வது, அங்கு வாழ்ந்த குடும்­பங்கள் வரு­டத்­திற்கு 18 வெள்­ளி­களை வழங்­கி­ய­தா­கவும், பன்­ச­ல­வுக்கு வந்து தமது பிரச்­சி­னை­க­ளையும், அறிக்­கை­க­ளையும் தெரி­வித்­த­தா­கவும், பன்­ச­லைக்குத் தேவை­யான அரிய பொருட்­களை உள்­நாட்­டிலும், வெளி­நா­டு­களில் இருந்தும்  கொண்டு வந்­த­தா­கவும்   அவ­ரது குறிப்­புக்கள் கூறு­கின்­றன,
மொறத்­தொட்ட தம்­ம­கந்த தேரர், பௌத்த மல்­வத்த நிகாய பிரிவின் மகா­நா­யக்­க­ரா­கவும் இருந்­தவர் மட்­டு­மல்ல, அக்­கால முஸ்­லிம்­க­ளுக்கும் இவ­ருக்கும் இடை­யே­யான தொடர்­பு­களும் மிக நெருக்­க­மாக இருந்­துள்­ளன
ஒரு­மைப்­பாட்­டிற்­கான இடம்
உண்­மையில்  தலதா மாளி­கையும் அத­னோடு தொடர்­பான  இலங்­கையின் வர­லாற்­றையும்,  நாம் அறி­ய­வேண்­டிய கட்­டாய கடமை உள்­ளது. அங்கு  சமய ரீதி­யான செயற்­பா­டுகள் இடம்­பெற்­றாலும் அதை­விட அங்­குள்ள வர­லாற்று அம்­சங்கள் மிக முக்­கி­ய­மா­னவை,
 அங்­குள்ள "கெப்­பட்­டி­பொல" வர­லா­றா­னது, இலங்­கையில் சிங்­களப் புரட்­சியின் ஊடாக கால­னித்­து­வத்­தையும், அதற்கு சார்­பான ஆட்­சி­யா­ளர்­க­ளையும் எதிர்த்துப் போராடி உயிர்­நீத்த இடம் நினை­வி­ட­மாக கட்­டப்­பட்­டுள்­ளது. அதே­போல  எஹ­லப்­பொ­லவின் இரண்­டா­வது மக­னான சிறுவன் மத்­தும பண்­டார தனது குடும்­பத்தை கொல்­வ­தற்­காக அழைத்­து­வந்த வேளையில் பலர் தப்­பி­யோட முயற்­சிக்­கையில் தான் முன்­வந்து தனது உயிரை வழங்கி வீர­னாக உயிர்­நீத்த வர­லாறும்,  அங்கு காணப்­படும் வாரி­யப்­பொல சுமங்­கள தேரரின் நினை­வுச்­சிலை பிரிட்டிஷ் - சிங்­கள ஒப்­பந்தத்­திற்கு முன்­னரே இலங்­கையின் சுதேச கொடி இறக்­கப்­பட்­டதை எதிர்த்து பிரிட்டிஷ் கொடியை பல­வந்­த­மாக இறக்­கிய வர­லாற்று நிகழ்­வு­க­ளையும் குறிக்கும் ஞாபகச் சின்­னங்­க­ளாக உள்­ளன.
இத்­தி­யா­கங்கள் ஒரு சமூ­கத்­திற்­கா­னவை மட்­டு­மல்ல, மாறாக அவை முழுத்­தே­சத்தின் சுதந்­தி­ரத்­திற்­கா­னவை.
 தலதா மாளி­கையின் உள்ளே காணப்­படும் சித்­திர வேலைப்­பா­டு­களும், அங்­குள்ள தொல்­பொருள் கட்­டி­டமும், அங்­குள்ள பொருட்­களும், எமது முன்னோர் இத்­தே­சத்­திற்கு ஆற்­றிய தேசப்­பங்­க­ளிப்­பையும், ஒரு­மைப்­பாட்­டையும் குறித்து நிற்­கின்­றன.
ஆனால், இவ்­வா­றான தேச  விடு­த­லைக்­கான பங்­க­ளிப்­பையும், சமூகப் போராட்­டங்­க­ளையும் பற்றி அறி­வ­திலும் அவற்றை எமது எதிர்­கால சந்­த­தி­யி­ன­ருக்கு எத்­தி­வைக்­கவும்  ஆர்­வ­மில்­லாமல் இருக்­கிறோம். அத்­துடன், ஒரு சமூ­கத்­திற்­கான சமய இடம் என ஒதுக்­கி­விட்டு, அவற்றை சமயக் கண்­கொண்டு மட்­டுமே நோக்­கு­வதும் இன்னும்   இவற்றில் ஆர்­வ­மின்றி இன்றைய முஸ்லிம்கள் தூரத்தே இருப்பதும்,  நாட்டில் ஏற்படும் சகிப்புத் தன்மையற்ற நிலைக்கும் முறுகலுக்குமான  முக்கிய காரணிகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது, 
செய்ய வேண்டியவை
இந்த வகையில் நாட்டின் தேசிய  வரலாற்றை பாதுகாக்கவும்,  அதில் எமது முன்னோர் செய்த  புராதனகால  பங்களிப்பை  இன்றும் நினைவுபடுத்தவும், அவ்வாறான இடங்களுக்குச் சென்று பார்வையிட்டு  அதன்மூலம் இன உறவைப்  பேணவும்,  பெரஹரா போன்ற  தேசிய நிகழ்வுகளில் முஸ்லிம்கள் தமது பங்களிப்புக்களையும், பங்குபற்றுதல்களையும், அதிகரித்து உறவுக்கான பங்களிப்பினை  செய்ய  வேண்டியதும், இத்தேசத்தின் ஒருமித்த வரலாற்று நிகழ்வுகளில் தாமும் கலந்துகொண்டு பெருமை கொள்வதும் காலத்தின் கடமையாகவே கருத வேண்டியுள்ளது,
இவ்வாறான நல்லிணக்க நடைமுறைகளே காலம் காலமான இனவொற்றுமையைக் கட்டி எழுப்புவதற்கான நிலையான செயற்றிட்டமாக அமையுமே தவிர கலவரங்களின்போது மட்டும் இடம்பெறும் தற்காலிக பேச்சுவார்த்தைகள் எந்தவித  நிரந்தரத் தீர்வுகளை தரப் போவதில்லை என்பதே என்போன்ற பலரின் பொதுவான அபிப்பிராயமாகும்.

-Vidivelli
கண்டி பெரஹராவும் முஸ்லிம் முன்னோர்களின் பங்களிப்பும் கண்டி பெரஹராவும் முஸ்லிம் முன்னோர்களின் பங்களிப்பும் Reviewed by NEWS on August 15, 2018 Rating: 5