கிழக்கின் அரசியல் அமைச்சர் றிசாத் அவர்களுக்கு சாதகமாக உள்ளளது( ஜெமீல் அகமட் )

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் தலைமை என்பது கிழக்கு மக்கள் அதுவும் அம்பாறை மக்கள் விரும்பும் அரசியல்வாதியே முஸ்லிம்களின் அரசியல்  தலைவனாக இந்த நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்ட வரலாறுகள் இருக்கின்றன அதற்கு சான்றுதலாக மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களை சொல்லலாம் 

கடந்த காலங்களில் வட கிழக்குக்கு வெளியில் இருந்து பலர் அரசியல் தலைவனாக வர வேண்டும் என்று ஆளுக்கொரு கட்சியை கொண்டு வந்து மக்களிடையே ஆதரவு கேட்ட போது அம்பாறை மக்கள் வட கிழக்குக்கு வெளியில் இருக்கும் தலைமையை நம்பவில்லை அதனால் தலைமை ஆசையுடன் வந்தவர்களின் திட்டம் நிறைவேறாததால் அவர்கள்  தேசிய கட்சிகளுடன் இனைந்து அரசியல் செய்தாலும் றவூப் ஹக்கிமிடம் 18 வருடமாக கிழக்கான் மாட்டிக்கொண்டு இப்போது கண்ணை முழிக்கின்றான் அதுதான் அதிசயம் இந்த நிலைக்கு மர்ஹும் அஸ்ரப் அவர்களே காரணம் என்றுதான் கூற வேண்டும் 

இலங்கை சுதந்திரம் அடைந்த காலம்தொட்டு முஸ்லிம்கள் அரசியல் அடையாளம் இல்லாமல் அனாதைகளாக வாழ்ந்து வருவதால் தேசிய கட்சிகள் முஸ்லிம்களை ஆட்சியின் கருவேப்பிலையாக பாவித்து வருவதை அவதானித்த மர்ஹும் அஸ்ரப் அவர்கள் சமுயத்தின் நலனுக்காக பல போராட்டத்துக்கு மத்தியில் ஆரம்பித்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சிக்கு அம்பாறை மக்கள் கிழக்கான் என்ற நம்பிக்கையுடன் வழங்கிய மகத்தான ஆதரவுடன் உருவான அக்கட்சி அதன் வளர்ச்சிக்கு நட்டிய மரம் விருச்ச மரமாக வேறோடி வளர்ந்து ஆலமரம் போல்  விழுதிட்டு ஆட்சியை தீர்மானிக்கும் தேசிய கட்சியாக இருந்த முஸ்லிம் காங்கிரஸ் இன்று மக்கள் மனதிலிருந்து விலகி சென்று கொண்டு இருப்பதை நினைத்தால் நாம் வளர்த்த மரத்தை கரையான் கூட்டம் அறுத்தது  வேதனை தான் 

முஸ்லிம் காங்கிரஸ்  உதயமாவதற்கு முதல் கிழக்கு மக்கள் எந்த பிரதேச தலைமையை விரும்பவில்லையோ அந்த பிரதேச மகன் றவூப் ஹக்கிம் கிழக்கு மக்களை ஏமாற்றி மிகவும் சூழ்ச்சிகரமாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்  தலைவனாக வந்த நாள் முதல் செய்வது அறியாமல் அஸ்ரப் அவர்களின் முகத்துக்காக ஹக்கிமை ஆதரித்து வந்த மக்கள் இன்று ஹக்கிம் கூட்டத்தால் ஏமாற்றம் அடைந்த போதும் அம்பாறையில் அஸ்ரப்பின் பாசறை நான் அஸ்ரப் என் தலைவன்டா என்று மேடைகளில் வீரம் பேசும் முன்னாள் அமைச்சர் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் அதாவுல்லாஹ் அவர்களுக்கு அஸ்ரப் அவர்களை நம்பி ஹக்கிமிடம் மாட்டிக்கொண்ட மக்களை காப்பாற்ற முடியவில்லை அவரின் குதிரை  அக்கறைபற்று மண்ணில் வளரும்  புல்லை தான் சாப்பிட வேண்டும் என்று நினைத்ததால் சமுதாயத்துக்கான அரசியல் அவரால் செய்ய முடியவில்லை அதனால்  அக்கறைபற்று மக்கள் அங்கிகரித்த அரசியலை அம்பாறை மாவட்ட மக்கள் அங்கிகரிக்கவில்லை  ஆகவேதான் ஹக்கிமிடமிருந்து மக்களை மீட்க முடியாத அதாவுல்லாஹ் சேர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியைடைந்தார் 

அம்பாறையில் வாழ்ந்து வரும் குதிரையும் சமுதாயத்தை பாதுகாக்காது  வளர்ந்து வரும் மர நிழலில் சமுதாயமும் உட்கார்ந்து இருக்கவும் முடியாது என்று அறிந்த முஸ்லிம் சமுதாயம் அம்பாறை மாவட்ட நிந்தவூரின் உரிமை மகன் வடக்கின் அழகு மகன் அஸ்ரப்பின் கொள்கைவாதியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிசாத் அவர்களின் உதவியை நாடிய போது அம்பாறையில் பாசம் கொண்ட அமைச்சர் றிசாத் அவர்கள் கிழக்கு மக்களை ஏமாற்றுவாதிகளிடமிருந்து மீட்க வன்னியில் சுதந்திரமாக வலமிட்டு பறந்து வாழ்ந்த மயில் கூட்டங்கள் கிழக்கு அனுப்பினார் அவைகள் வாணில் பறந்து குதிரையை கொத்தி விரட்டியது மரத்தில் கூடு கட்டி  முட்டையிட்டு தன் இனத்தை பெருக செய்து  மரமெல்லாம் மயில் குஞ்சுகள் மக்கள் பார்க்க மரமில்லை மரத்தை வளர்த்த போராளிகள் மரத்தின் நிழலில்  மயிலின் நடனம் கண்டு ரசித்து வாழும் காலம் முஸ்லிம்களின் முதுகெலும்பான அம்பாறையில் இன்று வந்து விட்டது அதனால் அன்று அம்பாறை மக்கள் விரும்பாத தலைமையை ஏற்றுக்கொண்டு 18 வருடம் வாக்களித்த குற்றத்துக்கு மன்னிப்பு  கேட்டு இன்று அம்பாறை மக்கள் விரும்பும் முஸ்லிம்களின் அரசியல் தலைவராக  அமைச்சர் றிசாத் அவர்களை ஏற்றுக்கொண்டுள்ளனர் இதை தான் பிரதமருக்கு உளவுதுறை சொல்லி இருக்கிறார்கள் அதை அவர் றவூப் ஹக்கிமுக்கு சொல்லியிருக்கின்றார் பிரதமர்  சொல்லாமல் கடந்த உள்ளூராச்சி தேர்தலும் ஹக்கிமுக்கு  சொல்லி இருக்கிறது 

அம்பாறை மாவட்டத்தை பொறுத்த வரை முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையாக அமைச்சர் றிசாத் அவர்களின் வருகைக்கு முதல் இருந்து என்பது உண்மை ஆனால் அமைச்சர் றிசாத் அவர்கள் 2015 ஆண்டு  அம்பாறைக்கு வந்த போது மக்கள் கண்ட முகம் பேச்சு கொள்கை என்பன மறைந்த தலைவர் அஸ்ரப்  போன்றது அதனால் மக்கள் அமைச்சர் றிசாத் அவர்களின் கட்சியை தலைவர் அஸ்ர அவர்களுக்கு செய்யும் நன்றிக்கடனாக இன்று ஏற்றுக்கொண்டுள்ளனர் 

அன்று  முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்த அஸ்ரப் அவர்களின் கொள்கைவாதிகளான முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் ஹசன் அலி தவிசாளர் பஷீர் சேகுதாவூத் சம்மாந்துறை தவிசாளர் நௌசாட் நிந்தவூர் தவிசாளர் தாஹீர் அட்டாளைச்சேனை முன்னாள் தவிசாளர் அன்சீல் முன்னாள் கிழக்கு மாகான சபை உறுப்பினர்கள் கலாநிதி ஜெமீல் , ஜவாத் றசாக்  அக்கறைபற்று முன்னாள் மாநகர எதிர்கட்சி தலைவர் ஹனீபா மதனி டாக்டர் பரீட் ARM ஜிப்ரி முன்னாள் கல்முனை மேயர் சிராஜ் மீராசாகீபு பொத்துவில் முன்னாள் பிரதேச உப தவிசாளர் தாஜுதீன் இப்படி கிழக்கில் உள்ள பல ஸ்தாபக உறுப்பினர்கள் இன்று அமைச்சர் றிசாத் அவர்களோடு இனைந்து இருக்கின்றனர் இதுபோல் இன்னும் பல முக்கிய உறுப்பினர்கள் மிக விரைவில்  இனையவுள்ளனர் இப்படியான சூழ்நிலையில்  முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு கிழக்கில் அரசியல் செய்ய முடியாத நிலை வந்து விட்டது அதனால் தான் தேசியப்பட்டியலை பாராளுமன்ற உறுப்பினர் A L M நசீரிடமிருந்து பறித்து எடுத்துக்கொண்டு அம்பாறையை விட்டு வெளியேற போட்ட திட்டம்  சரி வரவில்லை எப்படியும் எதிர் வரும் தேர்தலில் கிழக்கு  மாகாண சபையை மயிலிடம் கொடுத்து விட்டு ஹக்கிம் கிழக்கை விட்டு வெளியேறுவது உறுதி அப்படி வெளியேறும் நாளை பட்டாசு கொழுத்தி கொண்டாட மக்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...