இலங்கையிலிருந்து உலமெங்கும் தமிழ் மொழியில் இஸ்லாமிய தொலைக்காட்சி - சலாம் ரி.வி

இலங்கையிலிருந்து ஐரோப்பா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஒளிபரப்பாகவுள்ளது சலாம் ரி.வி, நவயுக தொடர்பாடலுக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சலாம் ரி.வி இன்னும் சில வாரங்களில் LYCA TV, YUPP TV, Lebra PLAY, Etisalat TV (Middle East) ஆகிய டிஜிடல் பொக்ஸ்களில் ஒளிபரப்பாகவுள்ளதாக அதன் பிரதம தொழில்நுட்ப ஆலோசகர் அஹமட் மிஸ்காத் தெரிவித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாக முஸ்லிம் ஊடகம் தொடர்பில் செயற்பட்டு வரும் குளோபல் ஊடக இல்லமே இந்த தொலைக்காட்சியை துவங்கியுள்ளது, இஸ்லாமிய வரண்முறைகளுக்கு உட்பட்டு நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அஷ்ஸெய்க் பர்ஹான் (பலாஹி), அஷ்ஸெய்க் ஹனீபா (மதனீ), அஷ்ஷெய்க் அஸ்ரப் (நளீமி), அஷ்ஸெய்க் றசாக் (மதனி), அஷ்ஷெய்க் ஹாறுன் சஹ்வி உள்ளிட்ட மிக பிரபலமான உலமாக்களை கொண்டுள்ள சிறப்பு ஆலோசகர் சபை இந்த தொலைக்காட்சியை வழிநடாத்தவுள்ளது. அத்துடன் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள மிக பழமைவாய்ந்த இஸ்லாமிய கிராமமான அட்டாளைச்சேனையில் இதன் கலையகம் மற்றும் தொழில்நுட்ப பிரிவு ஆகியவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வரலாறு சொல்லும் வைத்தியம், சலாம் செரண்டிப், நாளைய சமுதாயம், அறிவுக்களஞ்சியம், இறைத் தென்றல், பத்ர் களம் ஆகிய நிகழ்ச்சிகள் தினமும் ஒளிபரப்பாகவுள்ளதாக அதன் பிரதம நிகழ்ச்சி முகாமையாளர் குறிப்பிட்டார். டிஜிடல் பொக்ஸ்கள் தவிர்த்து பேஸ்புக் மற்றும் யுடியுபிலும் நேரலைகள் இடம்பெறவுள்ளது. இஸ்லாமிய நிகழ்ச்சிகள், மத்ரசாக்கள் நிகழ்ச்சிகள் பாடசாலை நிகழ்வுகள் என அனைத்தும் நேரலையாக எச்.டி தரத்தில் ஒளிபரப்படவுள்ளது.

சலாம்.ரிவியின் பேஸ்புக்  https://www.facebook.com/SalaamTV/

இஸ்லாமிய தொலைக்காட்சி பற்றிய கனவுகளுடன் பயணிக்கும் அனைவரும் இணைந்து கொள்ள முடியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்