சுஹதாக்கள் தினம் மறக்க முடியா கரிநாள்


ஆகஸ்ட் 03 ஆம் திகதி இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாற்றில் மறக்­க முடி­யாத கரி நாளாகும்.
பயங்­க­ர­வா­தத்தின் கோர­த்­தாண்­டவம் காத்­தான்­குடிப் பள்­ளி­வா­சல்­க­ளுக்குள் தொழுது கொண்­டி­ருந்த அப்­பா­வி­கள் 103 பேரைப் பதம் பார்த்த நாளே இது. இந்தக் கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் சரி­யாக 28 வரு­டங்­க­ளா­கின்­ற­ன.
இலங்­கையில் இனப் பிர­ச்­சினை தோற்றம் பெற்­றதன் விளை­வா­க மூன்று தசாப்த கால போர் நீடித்­தது. இதன் பக்க விளை­வு­க­ளாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கொடூ­ரங்கள் அரங்­கேற்­றப்­பட்­டன. இதனால் சுமார் 7000 க்கும் மேற்­பட்ட முஸ்­லிம்­களின் உயிர்கள் அநி­யா­ய­மாகப் பறிக்­கப்­பட்­டன. இவற்றில் விடு­தலைப் புலி­க­ளி­னா­லேயே ஏரா­ளமான முஸ்­லிம்கள் வடக்கு கிழக்கு பகு­தி­களில் படு­கொலை செய்­யப்­பட்­டார்­கள். அதே­போன்று ஆயி­ரக் கண­க்­கானோர் காய­ங்­க­ளுக்­குள்­ளா­னார்கள்.அவர்கள் இன்றும் பயங்­க­­­ர­வாதம் விட்டுச் சென்ற ஆறாத வடுக்­களின் நட­மாடும் சாட்­சி­க­ளாகவே நம் கண் முன் நட­மாடித் திரி­கி­றார்­கள்.
அதே­போன்­றுதான் முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான பல்லா­யிரக் கண­க்­கான ஏக்கர் நிலங்கள் புலி­களால் அப­க­ரிக்­கப்­பட்­டன. இவற்­றில் ஏரா­ள­மா­னவை போர் முடிந்து 7 வரு­டங்­க­ளா­கின்ற போதிலும் உரிய மக்­க­ளிடம் மீள ஒப்­ப­டைக்­கப்­ப­ட­வில்­லை.
எல்­லா­வற்றுக்கும் மேலாக 1990 ஒக்டோ­ப­ரில் வடக்கின் 5 மாவட்­டங்­க­ளி­லி­ருந்து முஸ்லிம்கள் இர­வோ­டி­­ரவாக துரத்­தி­ய­டிக்­கப்­பட்­டார்கள். இன்றும் அவ்­வாறு விரட்­டப்­பட்ட மக்­களில் 10 வீத­மானோர் கூட தமது பூர்­வீக இடங்­களில் மீளக்­கு­டி­யேற முடி­யாத நிலை­யே நீடிக்­கி­ற­து.
மேற்­படி இழப்­புகள் அனைத்தும் நடந்து முடிந்த நிதர்­ச­னங்கள் என்­கின்ற போதிலும் இன்­னமும் இனப்­பி­ரச்­சி­னை­யினால் முஸ்­லிம்கள் எது­வித இழப்­பு­க­­ளையும் சந்­தி­க்­க­வில்லை என்­பது போன்ற மாயையே வெளியில் காட்­டப்­ப­டு­வது கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.
 குறிப்­பாக இந்த நாட்­டின் அர­சியல் தலைவர்கள் புலி­க­ளுக்கு எதி­ராக பேசு­கின்ற போது மாத்­திரம் 'பள்­ளி­வா­ச­ல்­களில் படு­கொலை செய்­தார்கள்' என்று தமது தேவைக்­கா­கவும் முஸ்­லிம்­களை திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவும் உதட்­ட­ளவில் பேசி­­விட்டுச் செல்­கி­றார்­களே தவிர இந்த இழப்­பு­க­ளுக்­காக முஸ்லிம் சமூ­கத்­திற்கு கிடைக்க வேண்­டிய பரி­கா­ரம் பற்றிச் சிந்­திப்­ப­தா­கவோ செயற்­ப­டு­வ­தா­­கவோ தெரி­ய­வில்­லை.
பிற இன அர­சி­யல்­வா­தி­கள்தான் இவ்­வாறு நடந்து கொள்­கி­றார்கள் எனில், முஸ்­லிம் சமூ­கத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அர­சியல் தலை­வர்கள் கூட இவை பற்றி உரிய இடங்­களில் பேசு­வ­தாகத் தெரி­ய­வில்லை. முஸ்லிம் சமூ­கத்தின் கடந்த கால இழப்­பு­களை ஆவ­ணப்­ப­டுத்­தவோ இனப் பிர­ச்­சி­னைக்­கான தீர்வு மேசை­களில் இவற்றை சமர்ப்­பித்து முஸ்­லிம்கள் தரப்பில் நியாயம் கேட்­கவோ முஸ்லிம் தலை­மைகள் தயா­ரில்லை.
என­வேதான் வெறு­மனே இனப் பிர­ச்­சினைத் தீர்வில் முஸ்­லிம்­க­ளுக்கும் பங்கு வேண்டும் என வாய்­கி­ழிய பேசு­வதை விடுத்து 1980 களின் பின்னர் முஸ்லிம் சமூகம் இழந்­த­வைகள் தொடர்­பான முறை­யான ஆவ­ணப்­ப­டுத்­தல்கள் முஸ்லிம் சமூ­கத்தின் சார்பில் உட­ன­டி­யாகத் தொடங்­கப்­படல் வேண்டும். அவ்வாறான முயற்சிகளில் ஏலவே சுயாதீனமாக ஈடுபட்டுள்ளவர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட வேண்டும். அவை உரிய இடங்களில் தக்க தரு­ணங்­களில் சமர்ப்­பிக்­கப்­பட வேண்டும்.
அதை­வி­டுத்து தீர்வு முயற்சிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற சம­யங்­களில் மாத்­திரம் 'முஸ்லிம்களும் இழந்திருக்கிறார்கள்' என வாய­ளவில் பேசு­வதால் எந்த­வித பலனும் ஏற்­படப் போவ­தில்­லை.
இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு பயங்­க­ரா­வ­தி­களால் இழைக்­கப்­பட்ட அநி­யா­யங்­களின் உச்­ச­பட்­­ச­மாக கரு­தப்­படும் காத்­தான்­குடி பள்­ளி­வாசல் படு­கொ­­­லையின் 28 ஆவது வருட நினைவு நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்ற இன்றை தரு­ணத்தில் நாம் முன்­வைக்க விரும்பும் செய்­தி இது­வே­யா­கும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்