Aug 15, 2018

உழ்ஹிய்யாவை பொறுப்புடன் திட்டமிடுவோம்


புனித துல்ஹஜ் மாதத்தை நாம் அடையவிருக்கின்ற நிலையில் அதில் உழ்ஹிய்யா அமலை நிறைவேற்றுவதற்கான தயார்படுத்தல்கள் நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்று வருகின்றன. தனியாகவும் கூட்டாகவும் இதனை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
அந்த வகையில் உழ்­ஹிய்யா கடமையை நிறை­வேற்­றும்­போது நாட்டின் சட்­டத்தை மதித்து நடக்குமாறும்  பல்­லி­னங்­க­ளோடு வாழும் நாம் பிற சமூ­கத்­த­வர்கள் வேத­னைப்­படும் வகை­யிலோ அல்­லது அவர்­க­ளு­டைய உணர்வுகள் தூண்­டப்­படும் வகை­யிலோ நடந்து கொள்ளக் கூடாது எனவும் இலங்கை முஸ்லிம்களுக்கு சமூக அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளன.
ஷரீஆ சட்­டங்­களை மதி­யாது எம்­ம­வர்கள் உழ்­ஹிய்யா விட­யத்தில் நடந்து கொள்­வதும், நாட்டுச் சட்­டங்­களை துஷ்பிரயோகம் செய்வதும் கவலைக்குரியதாகும்.  கடந்த காலங்களில் மிகவும் நெருக்­க­மாக அடைக்­கப்­பட்டு வாக­னங்­களில் மிரு­கங்கள் உழ்­ஹிய்­யா­வுக்­காக ஏற்றி வரப்­பட்­ட­மையும் உரிய அனு­ம­திப்­பத்­தி­ரங்­க­ளின்றி மிரு­கங்கள் கொண்டு செல்­லப்­பட்­ட­மையும் பொலி­சா­ரினால் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட சம்­ப­வங்கள் பல பதிவாகி சமூகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியிருந்ததை இந்த இடத்தில் ஞாபகமூட்ட விரும்புகிறோம்.
உழ்­ஹிய்­யாவைக் கார­ண­மாகக் காட்டி நாட்டில் மாட­றுப்­பதைத் தடை செய்ய வேண்டும் என பௌத்த கடும்­போக்கு சக்­திகள் தொட­ராக போர்க் கொடி தூக்கி வரு­கின்­றன. இவ்வாறானவர்களின் கோரிக்கைகளை நியாயப்படுத்துமளவுக்கு நமது செயற்பாடுகள் ஒருபோதும் அமைந்துவிடக் கூடாது.
குறிப்­பாக உழ்­ஹிய்­யாவை நாட்டின் சட்ட திட்­டங்கள், விதி­மு­றை­க­ளுக்­க­மைய நிறை­வேற்ற வேண்டும்.  உழ்­ஹிய்­யா­வுக்­கான பிரா­ணி­களை கொள்­வ­னவு செய்­யும்­போதும் அவற்றை வாக­னங்­களில் எடுத்துச் செல்­லும்­போதும் உரிய அத்­தாட்சிப் பத்­தி­ரங்­களைப் பெற்­றி­ருத்தல், மிரு­கங்­களை எடுத்துச் செல்­வ­தற்குப் பொருத்­த­மான வாக­னத்தைப் பயன்­ப­டுத்­துதல், வாக­னத்தில் ஏற்­றிச்­செல்ல அனு­ம­திக்­கப்­பட்ட அள­வுக்­கேற்ப பிரா­ணி­களை வாக­னத்தில் ஏற்­றுதல், உழ்­ஹிய்­யா­வுக்குப் பொருத்­த­மான இடம், நேரம் என்­ப­வற்றை தீர்­மா­னித்துக் கொள்­ளுதல், குர்பான் தொடர்­பான விளம்­ப­ரங்­களை ஊட­கங்­களிலும் சமூக வலைத்தளங்களிலும் பிர­சு­ரிப்­பதைத் தவிர்த்துக் கொள்ளல், அவ்வப் பிர­தேச நிலை­வ­ரங்­களைக் கவ­னத்திற் கொண்டு பள்­ளி­வாசல் நிர்­வா­கத்தின் ஆலோ­ச­னை­களைப் பெற்று தனி­யா­கவோ அல்­லது கூட்­டா­கவோ உழ்­ஹிய்­யாவை நிறை­வேற்­றுதல், குர்பான் செய்­யப்­பட்ட பின் விலங்­கு­களின் கழி­வு­களை பொறுப்­பு­ணர்­வுடன், உரிய முறையில் புதைப்­பது முத­லான விட­யங்­களில் முஸ்லிம் சமூகம் கூடிய கவனம் செலுத்த வேண்­டு­ம்.
குறிப்­பாக பல்­லி­னங்­க­ளோடு வாழும் நாம், பிற சமூ­கத்­த­வர்கள் வேத­னைப்­படும் வகை­யிலோ அல்­லது அவர்­க­ளு­டைய உணர்வு தூண்­டப்­ப­டப்­படும் வகை­யிலோ நடந்து கொள்­ளவே கூடாது. போயா தினத்­தன்று பிராணிகளை அறுப்பதை முற்­றாகத் தவிர்ந்து கொள்­வதும் பிற சம­யத்­த­வர்­களின் உணர்­வு­க­ளுக்கு மதிப்­ப­ளிக்கும் வகையில் உழ்­ஹிய்­யாவை முறை­யாக நிறை­வேற்­று­வதும் மிகவும் அவ­சி­ய­மாகும் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.

-Vidivelli

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network