கண்டி நகருக்கு வெளியே உழ்ஹியாவை நிறைவேற்றுக

கண்டி எசல பெரஹரா நிகழ்வுகள் எதிர்வரும் 12ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதால்அக்கால எல்லைக்குள் முஸ்லிம்களுக்கு கடமையாக உள்ள உழ்ஹியாவை கண்டி நகர மக்கள் நகர எல்லைக்கு வெளியேில் நிறைவேற்றிக்கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்யத்துல் உலமாசபையின் கண்டிக்கிளை வேண்டுகோள் விடுத்துள்ளது. 

எசல பெரஹரா நிகழ்வுகள் எதிர்வரும் 12ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை கண்டி மாநகர சபை, நகர எல்லைக்குள் கால் நடைகள் அறுப்பதற்கும், இறைச்சி விற்பனைக்கு, இறைச்சி போக்குவரத்திற்கும் தடை விதித்துள்ளது. 

இந்நிலையில் முஸ்லிம்களுக்கு உழ்ஹியாக் கடமையாக உள்ளதால் கண்டி நகர முஸ்லிம்களுக்கு தமது உழ்கியா கடமையை  கண்டி நகர எல்லைக்கு வெளியே நிறைவேற்றிக்கொள்ள முடியும் என உலமாசபையின் கண்டி மாவட்டக் கிளையின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக உலமா சபையின் கண்டி மாவட்டக் கிளையின் உபதலைவர் மௌலவி பஸ்ருல் ரஹ்மான் தெரிவித்தார்.

 கண்டி நகர எல்லைக்குள் காள்நடைகள் அறுக்கப்பட்டாள் இறைச்சி போக்குவரத்து செய்யப்பட்டால் சம்மந்தப்பட்டவர்கள் சட்டநடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.

Share The News

Post A Comment: