சந்திரிக்கா அம்மையாருடன் மஸ்தான் எம்.பி




வவுனியாவில் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலான கலந்துரையாடலொன்று இன்று முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மீள் குடியேற்ற புனர்வாழ்வு , வடக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ. எம் ஹனீபா தலைமையில் நடைபெற்ற குறித்த கூட்டத்தில்
வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

இதன்போது  வடக்கு மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் மற்றும் அம்மக்களது வாழ்வாதாரத்தை தாமே கொண்டு நடத்துவதற்கான திட்டங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிக்குப் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் விளக்கமளித்தார்.

நல்லிணக்கம்  என்பது மக்களுக்கிடையே காணப்பட்டால் நாட்டை அபிவிருத்திப் பாதையில் விரைவாக கொண்டு செல்ல முடியும் எனவும், நல்லிணக்க செயற்பாடுகளை மேற்கொள்ளல் தொடர்பான கலந்துரையாடலுக்கும், செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தவும்  வவுனியா வருகை தந்த முன்னாள் ஜனாதிபதிக்கு பிரதி அமைச்சர் மஸ்தான் மக்கள் சார்பாக தமது நன்றியையும் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதிசந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உரையாற்றுகையில் ,

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் உட்பட  யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உள நல சமூக ஒருமைப்பாடு ஆகியவற்றினை மேம்படுத்தல் மற்றும் கிராமங்களில் வீட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன் பெண் தலைமைத்துவ குடும்பங்களிடம் தனியார் நிறுவனங்கள் கடன் திட்டங்களை வழங்கி அங்கு பேசப்படும் பேரங்கள் தொடர்பாகவும், மத்திய வங்கியின் கீழ் உள்ள நிறுவனங்களையும் அவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்பவர்கள் தொடர்பிலும்  கண்காணிப்பதற்கான  நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதுடன்  அவ்வாறான நிறுவனங்களை தடை செய்வது தொடர்பில் தாம் உயர் மட்டத்தில் பேசவுள்ளதாவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த கலந்துரையாடலில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மீள் குடியேற்ற புனர்வாழ்வு , வடக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், த.தியாகராஜா மற்றும் பிரதேச செயலாளர்கள்,அரச திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், வங்கி முகாமையாளர்கள், உட்பட பலரும்  கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்