மத்திய மாகாண சபையின் புதிய அங்கத்தவராக முன்னாள்மத்திய மாகாண சபை அமைச்சரான எம்.எஸ்.எம். ஷாபி நேற்றைய தினம் மாகாண சபையில் பதவியேற்றார்.

ஜ.தே.க மாகாண சபை உநுப்பினராக இருந்த திருமதி சித்தாரா மன்திலக்க கடசி அங்கத்துவத்தில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே ஷாபி நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டு இடம் பெற்ற மத்திய மாகாண சபைத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குப்பட்டியலின்படி எம்.எஸ்.எம். ஷாபி அவ்விடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்போது தெரிவித்ததாவது, 2013ஆம் ஆண்டு மாகாண சபையித் தேர்தலின் போது கொழும்பு மாவட்டத்தில் 19பேரைத் தெரிவு செய்வதற்காக சுமார் 19இலட்சம் வாக்குகள் எண்னப்பட்டு விருப்பு வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டன.

இதில் பாரிய சந்தேகம் அன்றுமுதல்  இன்றுவரை ஏற்பட்டுள்ளமை யாவரும் அறிந்த உண்மையாகும். எதிர்காலங்களில் இவ்வாறான நிலைமைகள் ஏற்படாது பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார். புதிய அங்கத்தவரின் வருகையை பாராட்டி பலரும் உரையாற்றினர்.

Share The News

Post A Comment: