அமைச்சர் சஜித்திடம்   றிஷாட் வேண்டுகோள்


யுத்தத்தினால் மோசமாக பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகி நிற்கும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு வீடுகள் வழங்குவதில் தேசிய வீடமைப்பு அதிகார சபை விஷேட கவனம் செலுத்த வேண்டுமேன அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார்.

வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை அமைச்சினால் 2017 கம் உதாவ செமட்ட செவன’ வீடமைப்பு திட்டத்தின் கீழ் மன்னார் நறுவிலிக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள லுார்து நகர் வீடமைப்பு  திட்டத்தின் அங்குராப்பண நிகழ்வில் அமைச்சர்  ரிஷாட் உரையாற்றினார்.

அமைச்சர் ரிஷாட் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், 
வடக்கு, கிழக்கு கோர யுத்தத்தினால் இடம்பெயர்ந்து உள்நாட்டிலும், இந்தியாவிலும் வாழ்ந்த மக்கள் இப்போது தாம் வாழ்ந்த பிரதேசத்தில் மீண்டும் வந்து,  வீடுகள் இல்லாததால் கொட்டிகளை  அமைத்து வாழ்ந்து வருகின்றனர். 

இலங்கை அரசியல் வரலாற்றில் மக்களால்  இன்னும் நேசிக்கப்பட்டு வரும் உதாரண புருஷரான முன்னாள் ஜனாதிபதி  பிரேமதாசாவின் புத்திராரன அபைச்சர்  சஜித் பிரேமதாசாவின் முயற்சியினால் வீடுகலற்றவர்களை   வீடுகள் உள்ளவர்களாக மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 


Share The News

Post A Comment: