Aug 11, 2018

மாபெரும் இரத்ததான முகாம்


















ஹஸ்பர் ஏ ஹலீம்

இலங்கை செஞ்சிலுவைச் சங்க திருகோணமலைக் கிளையினால் இன்று( 11) சனிக்கிழமை காலை 8.30 முதல் பகல் 1.00 வரை மொரவெவ, மஹதிவுல்வெவ  ஸ்ரீ விஜயராஜ பௌத்த விகாரையில் இரத்ததான முகாம் நடைபெற்றது. .

 இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னாள் கிளை நிறைவேற்று அதிகாரி டாக்டர்.ரவிச்சந்திரன் தலைமையில் இடம் பெற்றது. இரத்ததான முகாமில் 50 க்கும் மேற்பட்டவர்கள் இரத்ததானங்களை வழங்கினர் .

திருகோணமலைஇரத்ததான வங்கியினரின் ஒத்துழைப்புக்களுடன் வெற்றிகரமாக நடைபெற்றது.பொது நலன் விரும்பிகள், முப்படை அதிகாரிகள்,அரச ஊழியர்கள்,இளைஞர்கள்,தொண்டர்கள் என பலரும் பங்கேற்றதுடன் இரத்ததான முகாமுக்கு பாரிய பங்கினையும் வழங்கினர்.இதற்கான நிதி அனுசரனையினை டியலொக் எக்சிடா நிறுவனத்தின் திருகோணமலை கிளையினர் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network