தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Aug 23, 2018

புதுக்குளத்தில் புதிய பள்ளிவாசல் திறப்பு - மஸ்தான் திறந்து வைத்தார்

வவுனியா, ஆண்டியாபுளியங்குளம்,புதுக்குளம் கிராமத்தில் இன்று புதிய பள்ளிவாசல் ஒன்று  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள்குடியேற்றம்,புனர்வாழ்வு,வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்களால் திறந்து  வைக்கப்பட்டு தொடர்ந்து அஸர் தொழுகையும் நிறைவேற்றப்பட்டது.

இப்பிரதேச மக்கள் கெளரவ பிரதி அமைச்சரிடம் பள்ளிவாசல் ஒன்றுக்கான தேவை குறித்து பிரஸ்தாபித்திருந்ததையடுத்து பிரதியமைச்சர் அவர்கள் ஜாமிஆ கைரியா இஸ்லாமியா நிறுவனத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இப்பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

முஹம்மது அப்துல்லாஹ் புஸ்னான் அவர்களது நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட இப்பள்ளிவாசல்  நிர்மாணத்திற்கு ஐக்கிய அறபு இராஜ்ஜியத்தை சேர்ந்த அஹமத் ஹலாப் இஸ்மாயில் அவர்களும் ஸ்ரீலங்காவை சேர்ந்த முபஸ்ஸிர் சாதிக் அவர்களும் அனுசரனையளித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages