முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தனது சிறப்பு ஆலோசகராக மக்கதார் மஜீத் அவர்கைள கூடவே வைத்திருப்பது அனைவரும் அறிந்த விடயம், அவரின் பல எதிர்வு கூறல்கள் பலித்தும் உள்ளது, மக்கத்தார் மஜீத் கவியநயம் மிக்க மார்க்க அறிஞர் அது மாத்திரமின்றி அதாஉல்லாவுக்கு அவர்கூறிய ஆசிகள் பல ஜெயித்தும் உள்ளது.

சூபியச கொள்கையுள்ள அவர் தனக்கென ஒரு கூட்டத்தையே தன்வசம் வைத்துள்ளார், தன்ககென ஓர் பள்ளிவாசல் மத்ரசா என அனைத்தும் அவர் வசம் உள்ளது. இப்படியிருக்கையில் அதாஉல்லாவுக்கு பிறகு அரசியல் வாரிவாக அக்கரைப்பற்று மேயர் சக்கிதான் என்று பலரும் நினைந்திருந்தார்கள் ஆனால் அதற்கும் கொஞ்சம் மேலே இன்னுமொருவரையும் அதாஉல்லா களமிறக்கினார் இது மக்கத்தாரின் ஆலோசனையில்தான் இடம்பெற்றது, அக்கரைப்பற்றின் ஆளுமை என சொல்லப்பட்டவர் களமிறங்கிய வட்டாரத்திலே வெற்றிபெற்றார் டில்சான்.

மாநகரிற்கு முதல்வராக அல்லது பிரதி முதல்வராக டில்சான் பணிக்கு அமர்த்தப்படவில்லை, மாநகர பிரவேசம் டில்சானுக்கு ஓர் முன்னேற்பாடு அவர் மாகாண சபைக்கு செல்வதற்கான ஆயத்தமே மாநகர சபை. என்பதை பலர் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

உண்மையில் சக்கியை விட டில்சான் கொஞசம் எக்டிவ் ஆனவர், இளம் தலைமுறை அரசியல்வாதி மாகாண சபைக்கு ஏற்ற ஒருவர், மொழியாற்றல் செயலாற்றல், பழகும் திறன் என அனைத்தும் அவர் வசம் உள்ளதால் மக்கத்தார் அவரை தெரிவு செய்திருக்கலாம்.

எது எவ்வாறு இருந்தாலும் டில்சான் மாகாண சபை செல்வது உறுதி அதே போல வெல்வதும் உறுதி இன்சா அல்லாஹ்.

Share The News

Post A Comment: