முஸ்லிம் ஊடகவியலாளர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் - அதன் பிறகே சிறந்தவர்கள் உருவாகுவர் - பஹத் ஏ.மஜீத்ஊடகவியலாளர்களையும் இணைய ஊடகங்களையும் தரக்குறைவாக எண்ணுவதாலேயே சிறந்தவர்கள் இத்துறைக்குள் வர பின்வாங்குகின்றனர், நல்ல திறமையுள்ள வல்லவர்கள் உருவாக வேண்டுமாயின் இத்துறையை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என ஊடக கல்லுாரி நிறைவேற்றுப்பணிப்பாளர் பஹத் ஏ.மஜீத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் அக்கரைப்பற்றில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றி அவர், இன்று ஊடகங்களும், ஊடகவிலயாளர்களும் மலிந்து காணப்படும் காலம் ஆனால் நல்ல திறமையுள்ளவர்கள், வல்லவர்கள் இத்துறையில் குறைவு இத்துறையை மலினமாக்கும் விமர்சகர்களாலேதான் துறைக்குள் புதியவர்கள் வருதில்லை.

முஸ்லிம் ஊடகங்கள் உருவாக வேண்டும் என்று பேசும் நாம் அதற்காக என்ன செய்திருக்கிறோம் என்று சிந்திக்க வேண்டும், இது நவீன காலம் இந்த காலத்தில் வானொலி, தொலைக்காட்சி தேவையில்லை எல்லாமே டிஜிடலாக இணையத்திற்குள் வந்துவிட்டது, அதற்காக நம்மவர்கள் பலர் பாடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். அவர்களை ஊக்கப்படுத்துவது எமது கடமை அதனைச்செய்தாலே போதும் முஸ்லிம் ஊடகம் வளரும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்