தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Aug 21, 2018

குப்பை வீசினால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்கிறார் எம்.எஸ்.அப்துல் வாசித்எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை - பொத்துவில் பிரதேசத்திலுள்ள முக்கிய கேந்திர நிலையங்களில் குப்பைகளை வீசுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாசித் தெரிவித்தார்.
பொத்துவில், கோமாரி, மணல்மலை, கொட்டுக்கல், குடாக்கல், நவலாறு, லகுகல பிரதான வீதி ஆகிய இடங்களில் “இவ்விடத்தில் குப்பை கொட்டுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது” என்ற வாசகம் அடங்கிய அறிவித்தல் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் இதை மீறுவோர் மீது, 2008ஆம் ஆண்டின் 44ஆம் இலக்க, தேசியப் பொது வழிகள் சட்டம் 73 (1)இன் பிரகாரம், சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தவிசாளர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages