கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று 6ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகின்றது

நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகும் க.பொ.த  உயர்தர பரீட்சை செப்டெம்பர் மாதம் 1ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

321,469 பரீட்சார்த்திகள் இம்முறை உயர்தர பரீ்ட்சை எழுதவுள்ளனர். 244,146 பரீட்சார்த்திகள் பாடசாலை பரீட்சார்த்திகளாகவும் 77,323 பரீட்சார்த்திகள் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாகவும் 2,268 பரீட்சை நிலயங்களில் பரீட்சை எழுதுகின்றனர்.

இதேவேளை, பரீட்சை எழுதும் மாணவர்களின் நலன்கருதி விசேட சிசுசெரிய பஸ் சேவையை அரசாங்கம் நடைமுறைபடுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.
க.பொ.த உயர்தர பரீ்ட்சைகள் முடிவடையும் வரை இந்த பஸ் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த சேவை குறித்து முறைப்பாடுகள் இருப்பின் 011 7 555 555 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தெரிவிக்களாம் எனவும் இலங்கை போக்குவரத்து சபை மேலும் கூறியுள்ளது.

Share The News

Post A Comment: