சவாலில் வெற்றி கண்ட சாணக்கியத்தலைவர்!எம்.என்.எம்.யஸீர் அறபாத்- ஓட்டமாவடி.

அண்மைக்காலமாக அரசியல் அரங்கில் சூடுபிடித்த விடயமாக மாகாண சபைகளுக்கான புதிய தேர்தல் முறை காணப்படுகிறது.

இந்த மாகாண சபைக்கான புதிய தேர்தல் முறை மாகாண சபைகளின் ஆட்சி முடிவுற்ற நிலையில், பாராளுமன்றத்தில் அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கும் குறிப்பாக, வடகிழக்கு மாகாணத்திற்கு வெளியிலுள்ள முஸ்லிம்களையும், மலையகத்தமிழர்களையும் பாதிப்பதாக காணப்பட்டது.

இதற்கு ஆதரவு தர முடியாதென இதன் பாதிப்புகளை விளக்கி சிறுபான்மைக் கட்சித்தலைவர்களுடன் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் பல சுற்றுப்பேச்சுவார்தைகளை நாடாத்தி அவர்களையும் இணைத்துக்கொண்டு இதற்கெதிராக அன்றும் செயற்பட்டார்.

இதன் விளைவாக, அரசாங்கம் புதிய மாகாண சபை தேர்தல் முறை சட்டமூலத்தை நிறைவேற்றியாக வேண்டுமென்ற நிலைப்பாட்டில் சிறுபான்மைப் பிரதிநிதித்துவத்திற்குப் பாதிப்பில்லாத வகையில் புதிய முறையை உருவாக்குவதாக உத்தரவாதங்களும் வழங்கப்பட்டாலும், பாதிப்புகளைக் குறைக்கும் வண்ணம் ரவூப் ஹக்கீம் அவர்களால் காப்பீடுடாக தொகுதி மற்றும் விகிதாசார முறையில் 50:50 என்ற அடிப்படையில் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட வேண்டுமென்ற விடயத்தை சட்ட மூலத்தில் உள்வாங்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார்.

அத்துடன், எல்லை நிர்ணயத்தில் சிறுபான்மைப் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக எல்லை நிர்ணயம் செய்வதற்கு குழு நியமித்து அதன் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, அதனை 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டுமென்ற விடயங்களையும் சட்ட மூலத்தில் சேர்க்குமாறு கோரிக்கை முன்வைத்து பின்னர் சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்கினார்கள்.

இதன் போது சில விமர்சனங்கள் ஏற்பட்ட போது, சில தலைவர்கள் தங்களைப் பாதுகப்பதற்காக சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்கி விட்டு மக்களைத்திசை திருப்புவதற்காக தங்களுக்கு விருப்பமில்லை. இந்த தேர்தல் திருத்தச்சட்டத்தில் ரவூப் ஹக்கீம் அவர்கள் கையுயர்தவும் நாங்களும் உயர்த்தினோம் என பழியையும், விமர்சனத்தையும் அப்படியே ரவூப் ஹக்கீம் அவர்களை நோக்கித் திருப்பி விட முயற்சி செய்தார்கள்.

இவ்வாறான சூழ்நிலையில், இந்தத்தேர்தல் முறை, எல்லை நிர்ணயம் தொடர்பாக தனது அவதானத்தை ரவூப் ஹக்கீம் அவர்கள் செலுத்திக் கொண்டிருந்தார். அது தொடர்பான செயலமர்வுகளை நாடாத்தியதையும் நாமறிவோம்.
இவ்வாறான நிலையில், எல்லை நிர்ணய ஆணைக்குழு தங்களின் பணிகளைப் பூர்த்தி செய்து துறைக்குப் பொறுப்பான உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சர் பைஸர் முஸ்தபா அவர்களிடம் கையளித்தார்கள்.

இதன் பின்னர் எல்லை நிர்ணய அறிக்கையில் புதிய தொகுதி உருவாக்கத்தில் சிறுபான்மைச் சமூகம் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அன்று முதல் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் பாராளுமன்றத்தில் இதனைத் தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகளை சிறுபான்மைக் கட்சிகளை இணைத்துக் கொண்டு முன்னெடுத்தார்.

இந்த புதிய முறை சாரியாக அமையாது, காலத்தை நீடிக்காது பழைய முறையில் மாகாண சபைத்தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்தார்.
ஆனாலும், இதன் விளைவுகளை பலர் அன்று உணர்ந்திருக்கவில்லை. புதிய முறையில் மாகாண சபைத்தேர்தலை நடாத்தினால் பாதிப்புகள் அதிகம் ஏற்படும் பழைய முறையிலே தேர்தலை நடாத்த வேண்டுமென்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் உட்பட ஏனையவர்களும் வலியுறுத்திய போது, அதனைக்கணக்கிலெடுக்காத அரசாங்கம், புதிய முறையில் உள்ளூராட்சி மன்றத்தேர்தல் நடாத்திய பின்னர் விளங்கிக் கொண்டது.

பழைய முறையில் தேர்தலை விரைவாக நடாத்துவதற்கு எல்லாக்கட்சிகளும் உடன்பட்டாலும் ஜனாதிபதி தலைமையிலான சுதந்திரக்கட்சி புதிய முறையில் தான் தேர்தலை நடாத்த வேண்டுமென விடாப்பிடியாகச் செயற்பட்டது.

இதனால், ரவூப் ஹக்கீம் அவர்கள் இந்த தேர்தல் முறையின் பாதிப்புகளை புதிய உள்ளூராட்சித் தேர்தலின் பின்னரான நிலைமைகளை விளக்கி பழைய முறையில் தேர்தலை நடத்துவதின் அவசியத்தை உணர்த்தி சிறுபான்மைக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு செயற்பட்டார்.
கட்சித்தலைவர்கள் கூட்டத்திலும் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி இந்த தேர்தல் முறையில் ஏற்படும் தவறான விளைவுகளையும் விளங்கப்படுத்தினார், இந்தக்கருத்தில் எல்லாக் கட்சித்தலைவர்களும் ஒன்றுபட்டாலும், சுதந்திரக்கட்சி பிடிவாதமாக இருந்து.

புதிய முறையில் தேர்தலை நடாத்துவதற்கு எல்லை நிர்ணய அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிகை எடுத்த போது, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த எல்லை நிர்ணய அறிக்கையை பாராளுமன்றத்தில் தோற்கடிப்போமென்று சூளுரைத்தார்.

இந்த எல்லை நிர்ணய அறிக்கை வெற்றி பெற்றால் முஸ்லிம்கள் உட்பட மலையகத்தமிழர்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதனால், அமைச்சர் மனோ கணேசன், பாராளுமன்ற உறுப்பினர் டக்லஸ் தேவானந்தா போன்றோர்களுடன் இணைந்து ஏனைய கட்சிகளின் ஆதரவை இந்த எல்லை நிர்ணய அறிக்கைக்கெதிராகப் பெறுவதற்கு முயற்சி செய்தார்கள்.

அந்த வகையில், முஸ்லிம் காங்கிரஸின் 28வது பேராளர் மாநாட்டில் இந்த அறிக்கையைத் தோற்கடிக்க கூட்டு எதிரணியின் ஆதரவைப் பெறுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடனும், பேசவிருப்பதாகவும், எனைய கட்சிகளுடனும் பேசி ஆதரவைப்பெற்று இதனை தோற்கடிப்போமென சவால் விட்டிருந்தார்.

அதற்கமைய பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் அண்மையில் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் அமைச்சர் மனோ கணேசன், பாராளுமன்ற உறுப்பினர் டக்லஸ் தேவானந்தா, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை சந்தித்து அவர்களின் ஆதரவையும் கோரியிருந்தார்கள். இது தொடர்பான புகைப்படம் முகநூலில் வெளியிடப்பட்டு தவறான கருத்துகள் பகிரப்பட்டதை நாமறிவோம்.

யார் தன்னை எவ்வாறு விமர்சித்தாலும் தன் சமூக உரிமையை எவரைச் சந்தித்தாலும் நிறைவேற்றுவேன் என்ற துணிவோடு செயற்பட்டார்.

அதன் விளைவாக, இன்று பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கைக்கு 139 வாக்குகள் எதிராக அளிக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டிருக்கிறது.
இறைவனின் உதவியுடன் பல சாவால்களுக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தனது சமூகப்பொறுப்பையும், சவாலையும் போராடி வெற்றி பெற்றிருக்கிறார்.

தற்போது எல்லை மீள் நிர்ணய அறிக்கை தோற்கடிக்கப்பட்டதால் அடுத்த கட்டமாக பிரதமர் தலமையில் குழு அமைத்து ஆராயப்படலாம் என்ற நிலையில் பிரதமருடனான. அண்மையில் நடந்த கலந்துரையாடலில் ரவூப் ஹக்கீம் உற்பட சிலர் கலந்து கொண்டு தங்களின் இவை தொடர்பான நிலைப்பாடுகளை தெரிவித்து இருந்ததாகவும் அதனை அவர் ஏற்றுக் கொண்டதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டன.

எனவே எல்லா சவால்களையும் இறைவன் உதவியுடன் முறியடித்து வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.
சவாலில் வெற்றி கண்ட சாணக்கியத்தலைவர்! சவாலில் வெற்றி கண்ட சாணக்கியத்தலைவர்! Reviewed by NEWS on August 25, 2018 Rating: 5