அரசாங்கம் எதிர்கட்சி உறுப்பினர்களின் தொலைபேசி அழைப்புகளை மாத்திரமின்றி ஆழும்கட்சி உறுப்பினர்களின் தொலைபேசி அழைப்புகளையும் ஒட்டுக்கேட்பதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அலஹப்பெறும குறிப்பிட்டார்.

அரசாங்கத்தில் அங்கம் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் தொலைபேசி இலக்கங்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக குறிப்பிட்ட அவர் அமைச்சர் ஹக்கீமின் தொலைபேசியும் ஒட்டுக்கேட்கப்படுவதாக குறிப்பிட்டார்.

குறித்தே கருவி ஜப்பானில் தயாரிக்கப்பட்டதேனவும், அதனை பொதுவாக இராணுவத்தின் பாதுகாப்பு நடைவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நெக் (NEC)  என அழைக்கப்படும் குறித்த கருவி நுகேகொட பகுதியில் உள்ள வீடொன்றில் வைக்கப்பட்ட நிலையில் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவரின் தலைமையின் கீழ் கண்கானிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Share The News

Post A Comment: