Aug 8, 2018

அரசியலில் பெண்களின் பங்களிப்புபா. நஸீறா ஜமால்தீன்
4 ஆம் வருடம்
சமூகவியல் விஷேட துறை
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்  

அரச கொள்கை உரு­வாக்­கத்­திலும் உயர் நிர்­வாகப் பொறுப்­புக்­க­ளிலும் பெண்­களின் பங்­க­ளிப்பு பெய­ர­ள­வி­லேயே காணப்­ப­டு­கின்­றது. ஆணா­திக்க சிந்­தனை வளர்ச்­சி­ய­டைந்­துள்ள எமது நாட்டில் பெண்­களின் வாழ்­வி­ய­லா­னது பெரும் போராட்டம் நிறைந்­த­தா­கவே உள்­ளது. கல்­வியில் சாதனை படைத்­துள்ள பெண்கள் தனது உரி­மையை பெறு­வதில் கவ­ன­யீ­னத்­துடன் நடந்து கொள்­கின்­றனர். உண்­ணு­வதும் உறங்­கு­வதும் விரும்­பிய இடத்­திற்கு செல்­வதும் பிடித்த ஆடையை அணி­வது மாத்­திரம் பெண்­ணு­ரி­மை­யல்ல. மாறாக, அரசு விதிக்கும் ஒவ்­வொரு சட்­டத்­தி­னையும் சலு­கை­க­ளையும் அனு­ப­விப்­ப­தற்­கான உரி­மையை வேண்­டி­நிற்க வேண்டும். உரிமை எனும்­போது என் உணர்­வு­களில் உதிப்­பது பெண்கள் அர­சி­யலில் எந்­த­ளவு உரி­மையை பெறு­கின்­றார்கள் என்­ப­தே­யாகும்.
அர­சியல் என்­பது அதி­காரம் நிறைந்த விளை­யாட்­டா­கவே நோக்­கப்­ப­டு­கின்­றது. இப்­பொ­து­வான எண்­ண­மா­னது பெண்கள் அர­சி­யல்சார் விட­யங்­களில் பங்­கேற்கும் நடத்தை கோலத்­தினை பெரு­ம­ளவு தீர்­மா­னிக்­கின்­றது. இயற்­கையின் படைப்பால் ஆணும் பெண்ணும் சம­மான தரத்­தினை கொண்­டி­ருப்­பினும் மூன்றாம் மண்­டல நாடு­களில் பால்­நிலை சமத்­துவம் என்­பது பாரிய வேறு­பா­டு­க­ளுடன் நோக்­கப்­ப­டு­கின்­றமை துர­திஷ்­ட­மான விட­ய­மாகக் கரு­தப்­ப­டு­கின்­றது. இருப்­பினும் இன, மத, கலா­சார மற்றும் சமூக விட­யங்­களில் இப்­பால்­நிலை சமத்­து­வ­மென்­பது வேறு­பட்டே நோக்­கப்­ப­டு­கின்­றது (Sirima Kiribamune & Vidyamali Samarasinghe-1990)  இலங்­கையில் பெரும்­பா­லான அர­சியல் கட்­சி­களில் ஆண் உறுப்­பி­னர்­களே அதி­க­மாகக் காணப்­ப­டு­கின்­றனர். அர­சியல் பங்­கு­பற்றல் என்­பது  ஜன­நா­யக நாடு­களில் ஜன­நா­யகத் தன்­மையின் கரு­வாக எடுத்­துக்­காட்­டப்­ப­டு­கின்ற போது ஆண்கள் கூடு­த­லான உரி­மை­யையும் பெண்கள் குறை­வான உரி­மை­யி­னையும் அனு­ப­விப்­பது உண்­மை­யான ஜன­நா­யகத் தன்­மை­யல்ல. மாறாக இரு பாலி­னமும் சம அந்­தஸ்­தினை பெறு­வதே ஜன­நா­யகத் தன்­மை­யாகும்.
ஐ.நா. பொதுச்­ச­பை­யினால் 1948ஆம் ஆண்டு கொண்­டு­வ­ரப்­பட்ட மனித உரி­மைகள் மீதான பிர­க­ட­னத்­தின்­படி, ((universal  declaration of human rights) உறுப்­புரை 7இல் சட்­டத்­தின்முன் அனை­வரும் சமம். அத்­துடன் எந்­த­வொரு பார­பட்­ச­மு­மின்றி சட்­டத்தின் சம­மான பாது­காப்­பிற்கு அனை­வரும் உரித்­து­டை­ய­வர்கள். இவ்­வா­ச­க­மா­னது குடி­யியல், அர­சியல் உரிமை மீதான சர்­வ­தேச பொருத்­தத்­தினை எடுத்­துக்­காட்­டு­கி­றது. இதில் பெண்­ணா­னவள் தகு­தி­யற்­றவள் என்று வேறு­ப­டுத்­திக்­காட்­ட­வில்லை.
1979ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் திகதி பெண்­க­ளுக்கு எதி­ரான பார­பட்­சங்­களை இல்­லா­தொ­ழித்தல் மீதான சம­வாயம் (Vention on elimination of discrinimination against woman) சேர்த்துக் கொள்ள கையொப்­ப­மிட முன்­வைக்­கப்­பட்ட போது 1981ஆம் ஆண்டு செப்­டம்பர் மாதம் 3ஆம் திகதி வலு­வி­ழந்­தது. ஆனால் இலங்கை அர­சா­னது 1981ஆம் ஆண்டு ஒக்­டோபர் 5ஆம் திகதி பின்­னு­று­திப்­ப­டுத்­தி­யது. இவ்­வா­றான சாச­னங்­க­ளா­னது அர­சியல் உரிமை என்­பது மனிதன் அனு­ப­விக்கும் முத­லா­வது உரிமை எனவும் அதனை அனு­ப­விக்க பெண் என்­பவள் முழு­மை­யான தகு­தி­யு­டை­யவள் என்­ப­தையும் தெளி­வு­ப­டுத்­து­கி­றது.
இலங்­கையை பொறுத்­த­வரை பெண்­களின் சனத்­தொ­கை­யா­னது 51.86 வீதம் காணப்­ப­டு­கின்­றது (Gender statistic- 2016). 2015இல் தெரி­வான பெண் பாரா­ளு­மன்றப் பிர­தி­நி­தி­களின் எண்­ணிக்­கை­யா­னது 2010இல் தெரி­வான 13 என்ற எண்­ணிக்­கை­யி­னையே பிர­தி­ப­லிக்­கின்­றதே தவிர இவற்றில் அதி­க­ரிப்பு ஏற்­ப­ட­வில்லை. 225 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் 13 பெண் உறுப்­பி­னர்­களே உள்­ளமை இலங்­கையில் பெண் அர­சியல் பங்­கு­பற்­றலின் ஆர்­வ­மின்­மையை எடுத்­துக்­காட்­டு­கி­றது (Hand book of parliament -2017). இத­ன­டிப்­ப­டையில் பார்க்கும் போது மொத்த பிர­தி­நி­தி­களின் விகி­தா­சார அடிப்­ப­டையில் பெண் பிர­தி­நி­தி­களின் விகி­தா­சா­ர­மா­னது 6வீதம் குறை­வா­கவே காணப்­ப­டு­கின்­றது.
2014ஆம் ஆண்­டி­னது இலங்கை தேசிய மானிட அபி­வி­ருத்­தியின் அறிக்­கைப்­படி (NHDR), பாரா­ளு­மன்ற பெண் பிர­தி­நி­தித்­துவம் 2015ஆம் ஆண்டு 5.8வீத­மாகக்  காணப்­பட்­டது என தெரி­வித்­தது. நேபா­ளத்தில் 33.2வீதம், பங்­க­ளா­தேசில் 19.7வீதம் மற்றும் இந்­தி­யாவில் 10.9வீதம் பெண் பிர­தி­நி­தித்­து­வ­மா­னது மத்­திய அரசில் காணப்­ப­டு­கின்ற போதிலும் இலங்­கை­யி­லேயே மிகக் குறை­வான பெண் அர­சி­யல்­வா­திகள் காணப்­ப­டு­கின்­றமை சர்­வ­தேச ரீதியில் கேள்­விகள் பல­வற்றை எழுப்­பு­கின்­றன.
பிரித்­தா­னிய கால­னித்­து­வத்தின் கீழ் இருந்த நாடு­களில் 1931ஆம் ஆண்டு பெண்­க­ளுக்கு வாக்­கு­ரிமை வழங்­கிய முத­லா­வது நாடாக இலங்கை காணப்­ப­டு­கின்­றது. மகளிர் அமைப்பை சேர்ந்த சட்­டத்­த­ரணி அருள்­வாணி சுதர்சன் கூறு­கையில் “ இலங்­கையில் நடை­முறை அர­சி­யலில் காணப்­படும் பெண் எதிர்ப்பு மனோ­பா­வமும் ஆணா­திக்க சிந்­தனை மற்றும் அணு­கு­முறை போன்­ற­வற்றால் விளையும் கசப்­பான அனு­ப­வங்­க­ளி­னாலே தனது பார்­வையில் பெண்கள் அர­சி­யலில் நேர­டி­யாக ஈடு­ப­டு­வதை தவிர்த்துக் கொள்­கி­றார்கள். பெண்­ணியல் வாதி­களின் கருத்­துப்­படி, நடை­மு­றையில் காணப்­படும் வன்­முறை போக்கு மது­பான பாவனை போன்ற மோச­மான நடை­மு­றைகள் பெண்­களின் அர­சியல் பங்­க­ளிப்­புக்கு தடை­யாக அமை­கின்­றன.
பாரா­ளு­மன்­றத்தில் பெண்­களின் பிர­தி­நி­தித்­துவ உலக தர­வ­ரி­வையில் இலங்கை 177ஆவது இடத்தில் அமைந்­துள்­ளது. உள்­ளூ­ராட்சி மன்­றத்தில் 1.8வீதம் பிர­தி­நி­தித்­துவம் தான் இது­வ­ரையில் காணப்­ப­டு­கின்­றது (Parliament union -2016). இந்த நில­மை­­யினை மாற்ற பல தசாப்த கால­மாக பெண் செயற்­பாட்­டா­ளர்கள், பெண் அமைப்­புக்கள் என்­பன குரல் கொடுத்து வந்­த­தற்கு பல­னாக 2010ஆம் ஆண்டு 16ஆம் இலக்க சட்­டத்தின் மூலம் உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான புதிய தேர்தல் முறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டதில் பெண்­க­ளுக்கு 25வீதம் இட ஒதுக்­கீடு உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது (Parliament union -2016) . 2018 பெப்­ர­வரி 10இல் இடம்­பெற்ற உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­த­லிலே இம்­முறை செயற்­ப­டுத்­தப்­பட்­டது. இத்­தேர்­தலில் 341 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்கு 8356 உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­ப­ட­வி­ருந்­தனர். அதற்­காக 56000 அதி­க­மான வேட்­பா­ளர்கள் போட்­டி­யிட்­டனர். இலங்­கையில் மொத்­த­மாக 17000 பெண் வேட்­பா­ளர்கள் போட்­டி­யிட்­ட­மை குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாகும். 2011இல் நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி தேர்­தலில் 100க்கும் குறை­வா­ன­வர்­களே உறுப்­பி­ன­ராகத் தெரிவு செய்­யப்­பட்­டனர். ஆனால் இம்­முறை தேர்­தலில் உள்­ளூ­ராட்சி அமர்வில் கட்­டாயம் 25வீதம் பெண் பிர­தி­நி­திகள் அமர்த்­தப்­பட வேண்­டு­மெனக் கட்­டளை பிறப்­பிக்­கப்­பட்­டதில் பெண்கள் உண்­மை­யி­லேயே பிர­தி­நி­தி­க­ளா­யி­னரா? இது நடை­முறைச் சாத்­தி­யமா? என்­பது கேள்­விக்­கு­றி­யா­கவே உள்­ளது.
57 ஆண்­டு­க­ளிற்கு முன்பு இலங்­கையில், ஏன் உல­கி­லேயே முத­லா­வது பெண் பிர­த­ம­ராக சிறிமா பண்­டா­ர­நா­யக தெரிவு செய்­யப்­பட்டார். பின்பு அவ­ரது மகள் சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக இலங்­கையில் ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்டார்.  இதன் பின்பு பிர­பல்­ய­மான வகையில் பெண் பிர­தி­நி­தித்­துவம் நலி­வ­டையத் தொடங்­கி­யது. பின்பு பேசத்­தகும் வகையில் கடந்த உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் றோசி சேனா­நா­யக இலங்கை தலை­ந­க­ரான கொழும்பு மாந­கர தேர்­தலில் போட்­டி­யிட்டு மேய­ராகத் தெரிவு செய்­யப்­பட்­ட­மை­யாகும். இவரே இலங்­கையின் முத­லா­வது பெண் மேய­ரா­கவும் காணப்­ப­டு­கின்றார்.
பொது­வாக பெண்­களின் அர­சியல் பங்­கு­பற்­ற­லா­னது மறை­முக, நேரடி பங்­கு­பெற்றல் என்ற இரண்டு வகை­களில் காணப்­ப­டு­கின்­றன. அதா­வது, நேரடி பங்­கு­பற்­ற­லா­னது, தேர்­தலின் போது மட்டும் அர­சியல் விட­யங்­களை வீட்­டி­லி­ருந்து கொண்டு குடும்ப உறுப்­பி­னர்­க­ளுடன் கலந்­தா­லோ­சித்தல், குடும்­பத்­தி­ன­ரு­டைய சார்பு கட்­சி­க­ளுக்கு தனது விருப்­பினை வழங்க பழக்­கப்­ப­டுதல், அர­சியல் கட்­சி­க­ளுக்கு ஆத­ரவு தெரி­வித்தல், தேர்­தலின் போது சாத­க­மான மனப்­பாங்­கினை ஒரு கட்­சியின் மேல் கொண்­டி­ருத்தல், சிறு கூட்­டங்கள் நடாத்­து­வ­தற்கு தேவை­யான ஏற்­பா­டு­களை மேற்­கொள்ளல், தனது அயல் வீடு­களில் உள்­ள­வர்­களை ஒன்று திரட்டி கூட்­டங்­க­ளிற்கு அழைத்தல், வீடு­களில் பெண்­க­ளுக்­கான கூட்­டங்­க­ளினை நடாத்த அதற்கு ஏற்ற வச­தி­களை தேர்தல் காலங்­களில் உத­வி­களை கட்­சி­க­ளுக்கு வழங்­குதல் போன்ற செயற்­பா­டு­களின் மூல­மாக பெண்கள் அர­சி­யலில் மறை­மு­க­மாக பங்­க­ளிப்பு செலுத்­து­கின்­றனர் என்று எடுத்­துக்­காட்­டலாம். அனைத்து சமூகத்­தினை சேர்ந்த பெண்­களின் மத்­தியில் இது­போன்ற செயற்­பா­டா­னது சாதா­ர­ண­மாக காணப்­ப­டு­கின்­றதே தவிர மாறாக இவற்றில் எவ்­வித நலி­வு­க­ளையும் வீழ்ச்­சி­க­ளையும் காண­மு­டி­யா­துள்­ளது.
நேர­டி­யான அர­சியல் பங்­கு­பற்­ற­லா­னது பெண்­க­ளை­விட ஆண்­க­ளி­டமே அதி­க­மாக வளர்ச்­சி­ய­டைந்­துள்­ளது. பெண்கள் அதி­க­ளவில் அர­சி­யலில் பங்­கு­பற்­றா­மைக்­கான கார­ணங்­க­ளாக சமூக, பொரு­ளா­தார, சமய, உள­வியல் விட­யங்­க­ளினை எடுத்­துக்­காட்ட முடியும். சில பெண்­க­ளுக்கு ஆர்­வ­மி­ருந்தும் பொரு­ளா­தார வசதி இல்­லா­மை­யாலும், அர­சியல் பின்­ன­ணி­யு­டைய பரம்­பரை இல்­லாமை, தேர்­தலில் போட்­டி­யிட நாடியும் செல்­வாக்கு இல்­லா­மலும் வாய்ப்­புகள் நழு­வ­வி­டப்­ப­டு­கின்­றன. சமூ­கத்தில் உயர்ந்த அந்­தஸ்தில் இருக்கும் பெண்­க­ளைத்தான் கவனம் செலுத்­து­கி­றார்­களே தவிர திற­மைக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­ப­ட­வில்லை. இங்­ஙனம் பெண்­க­ளுக்கு அர­சி­யலில் வெறுப்­பு­ணர்வு உத­ய­மா­கின்­றது. இவ்­வா­றான விட­யங்­க­ளிற்கு தீர்­வினை காணும்­போது அர­சி­யலில் பெண்­களின் பங்­க­ளிப்­பினை மெரு­கூட்ட இல­கு­வாக அமையும்.
அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற புதிய சட்­ட­மூ­லங்­களால் உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­தலில் பெண்­களின் கட்­டாய பிர­தி­நி­தித்­து­வத்­தினை வலி­யு­றுத்­தி­னாலும் அதை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் உள்ள சவால்­களை கண்­ட­றிந்து அவற்றை தீர்ப்­ப­தற்­கான வழி­களை எடுத்­துக்­காட்ட வேண்­டி­யுள்­ளது. வெறு­மனே சட்டம் கொண்டு வந்­தாலும் அதை நிலை­நாட்­டு­வ­தி­லேயே உண்­மை­யான வெற்றி தங்­கி­யுள்­ளது. பெண்­க­ளுக்கு தேர்­தலின் முக்­கி­யத்­துவம், பங்­கு­பற்­று­வ­தி­லுள்ள அவர்­க­ளது உரி­மை­களை எடுத்­துக்­காட்டும் வகையில் விழிப்­பு­ணர்­வு­களை ஊட்ட வேண்­டி­யுள்­ளது. அர­சியல் என்­பது ஆண்­க­ளுக்கு மட்­டு­மா­னது என்ற கருத்­தினை விட்டு பெண்­க­ளுக்கும் சம உரி­மை­யுள்­ளது என்று தெளி­வு­ப­டுத்த வேண்­டிய தேவை­யுள்­ளது. குறிப்­பாக மதத்­தினை பிர­தி­ப­லிக்கும் கட்­சி­களில் மாத்­திரம் வாய்ப்பு வழங்­காமல் ஏனைய கட்­சி­க­ளிலும் சம­வாய்ப்­பினை வழங்க வேண்­டிய தேவை­யுள்­ளது. இவ்வாறான தேவைகளை நிறைவேற்றும் போது எந்தவொரு பிரதேசத்தினை சேர்ந்த பெண்களது அரசியல் பங்குபற்றலினை மெருகூட்டுவதற்கு வாய்ப்பாக அமையும். 
பெண்களின் அரசியல் செல்வாக்கு எப்படி இருக்க வேண்டும் என்பதில் சச்சரவு சதுரவடிவிலே காணப்படுகின்றது. ஏனெனில், அரசியல் மோசமான படுகுழி என்று கருதப்படுவதால் அதிலிருந்து அதிகமானோர் விலகிச் செல்லவே முயல்கின்றனர். இந்நிலைமையில் மாற்றத்தினை ஏற்படுத்த படித்த பெண்களின் திறமை அவசியப்படுகின்றது. போரில் நாட்டை காக்க பெண் ஆயுதம் ஏந்துகிறாள். ஆனால் அரசியல் உலகில் போராடுவதற்கு தேவை என்ன உள்ளது? என்ற சொல்லாடலானது பாலுணர்வைக் கொண்ட ஆண் கொள்கையாளர்களிடையே காணப்படுகின்றது. அகப்பை ஏந்தும் கைகளால் அரசையும் ஆள முடியும் என நிரூபித்துக்காட்ட வேண்டிய பொறுப்பு இன்றைய யுவதிகளிடமே உள்ளது. ஏனைய துறைகளில் சாதிக்கத் தெரிந்த பெண்களுக்கு அரசியலில் சாதிக்க முடியாதா? பேனா பிடித்த கரங்களால் கொள்கைகளை உருவாக்க முடியாதா? பயத்தை துறந்து பாதாளம் வரை செல்ல வேண்டுமென்றாலும் முடியும் என்ற உணர்வினை பெண்கள் மத்தியில் வலுப்பெறச் செய்ய வேண்டும். உண்மையினை உணரச்செய்து அடுத்து வரும் தேர்தலிலாவது பெண் பிரதிநிதித்துவத்தினையும் பங்குபற்றலினையும் அதிகரிக்கச் செய்ய வேண்டிய பொறுப்பு அனைவர் மத்தியிலும் கடைப்பிடிப்போம்.
-விடிவெள்ளி 

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network