மக்களுக்கு சேவையாற்றாத சகல அரச அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்ஹஸ்பர் ஏ ஹலீம்


மக்களுக்கு சேவை யாற்றாத  சகல அரச  அதிகாரிகளுக்கும் எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் முக்கியமாக பிரதேச செயலக அதிகாரிகள் உள்ளடங்களாக    என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

கொழும்பில்  அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இன்று (02)  நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.

திருமலை மாவட்டத்தில் உள்ள சில அரச அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து பல்வேறு முறைப்பாடுகள் தமக்கு கிடைத்த வண்ணமுள்ளதாக  அவர் குறிப்பிட்டார்.இத்தகைய அரச  அலுவலர்கள்,அதிகாரிகள் பொதுமக்களுக்கு சேவையாற்றாமல் ஒப்பந்த கார்களுடன் இணைந்து செயல்படுவதினால் நிதிகள் முறையாக பொதுமக்களை சென்றடைவதில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன இவர்களின் இத்தகைய செயற்பாடுகளால் திருகோணமலை மாவட்டத்தின்  வளங்கள் எமது மக்களின் நலன்களுக்கு மாறாக குறிப்பிட்ட சிலரால் வெளி இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. 
அரச அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக உரிய அமைச்சர்களுடன் கலந்துரையாடியுள்ளேன் எனவே விரைவில் இவர்களுக்கு  எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...