39வது ஐ.நா அமர்வில் இலங்கை சார்பில் அசீஸ் மாத்திரம் கலந்து கொள்வார்


ஜெனீவா மெித உரிமை அமர்வு சிறப்பு செய்தியாளர் சஜீ

இந்த முறை ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில்  கலந்து கொள்வதற்காக இலங்கையை பிரதிநித்துவப்படுத்திய குழுவொன்றை அங்கு அனுப்புவதற்கான எண்ணம் கிடையாது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையைப் பிரதிநித்துவப்படுத்தி கடமையாற்றுகின்ற அதிகாரியொருவர்  இந்தக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வார் என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹெசினி கொலன்னே  தெரிவித்துள்ளார்.

இதன்படி, இலங்கை அரசாங்கத்தின் சார்பில் ஜெனீவாவில் உள்ள இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி அப்துல் அசீஸ் கலந்து கொள்வார் என  அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக இலங்கையை பிரதித்துவப்படுத்திய குழுவொன்றை அனுப்புவதற்கு  ஏற்கனவே நடடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்த நிலையிலேயே, வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

எனினும், இந்தக் கூட்டத் தொரில் கலந்து கொள்வது குறித்து எதிர்வரும் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் போது தீர்மானிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன், ஜெனீவா  கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான இரண்டு அறிக்கைகள் சமர்பிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதுதவிர, இலங்கையில் விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி பெப்லோ டீ கிரிப் இனால் தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்றும் இதன்போது சமர்பிக்கப்படவுள்ளது.

மேலும், இலங்கையில் மரண தண்டனையை செயற்படுத்துவது குறித்தும் இந்த அமர்வில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவின்  39 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 10 திகதி முதல் 28 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...