முஸ்லிம்களின் இனவாதி, அமித் வீர­சிங்கவை கைது செய்ய உதவியதால் -5 இலட்சம் வழங்கிய பொலிஸ்

கண்டி – திகன பகு­தியில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளுடன் தொடர்­பு­பட்ட மஹசொன் பல­கா­யவின் அமித் வீர­சிங்க உட்­பட்­ட­வர்­களைக் கைது செய்ய பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க சில்­வா­வுக்கு நானே ஒத்­து­ழைப்பு வழங்­கினேன். இதே­போன்று ரோஹிங்ய அக­தி­களை கல்­கி­சையில் தாக்­கி­ய­வர்­களைக் கைது செய்­வ­தற்கும் நானே உரிய தக­வல்­களை வழங்­கினேன். இதற்­காக பொலிஸ் திணைக்­களம் அன்­ப­ளிப்­பாக எனக்கு 5 இலட்சம் ரூபா வழங்­கி­யது. 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ ஆகி­யோரின் கொலை, சதித்­திட்டம் தொடர்பில் தகவல் வெளி­யிட்ட ‘ஊழ­லுக்கு எதி­ரான படை’ அமைப்பின் பணிப்­பாளர் நாமல் குமார இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

சிங்­கள நாளி­த­ழுக்கு வழங்­கிய பேட்­டி­யொன்­றி­லேயே அவர் இந்த விப­ரங்­களை வெளி­யிட்­டுள்ளார். அவர்­மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது;

ரோஹிங்ய அக­தி­க­ளான புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்கள் கல்­கி­சையில் வைத்துத் தாக்­கப்­பட்­டார்கள். இந்த தாக்­குதல் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­பட்ட சந்­தேக நபர்­க­ளான அரம்­பே­பொல ரத்­ன­சார தேரர், சிந்­தக சஞ்­சீவ, டேன் பிரி­ய­சாந்த, ஜனித மினிபே ஆகி­யோரைக் கைது­செய்ய பொலிஸார் என்­னிடம் உதவி கோரி­னார்கள். நான் ஆரம்­பத்தில் பொலி­ஸா­ருக்கு ஒத்­து­ழைப்பு நல்­க­வில்லை என்­றாலும் தேசிய பாது­காப்பு கருதி நான் பொலி­ஸா­ருக்கு உதவி செய்தேன். நான் வழங்­கிய தக­வல்­க­ளின்­படி இவர்கள் கைது செய்­யப்­பட்­டனர்.

கண்டி– தெல்­தெ­னிய வன்­செ­யல்­க­ளி­னை­ய­டுத்தும் இவ்­வாறே என்­னிடம் உதவி கோரப்­பட்­டது. நான் மஹசொன் பல­காய அமித் வீர­சிங்­கவை நன்கு அறிவேன் என்­பது பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்­வா­வுக்குத் தெரியும். இது தொடர்பில் அவர் என்­னிடம் உதவி கோரினார். நான் அமித் வீர­சிங்க உட்­பட்ட சிலரைக் கைது செய்­வ­தற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கினேன்.

பொலி­ஸா­ருக்கு நான் ஒத்­து­ழைப்பு வழங்­கி­ய­தற்­கா­கவும் தக­வல்கள் தெரி­வித்­த­தற்­கா­கவும் எனக்கு 2 ½ இலட்சம் ரூபா வீதம் 5 இலட்சம் ரூபா பொலி­ஸாரால் அன்­ப­ளிப்­பாக வழங்­கப்­பட்­டது.

நான் வெளி­யிட்ட கொலைச் சதி­மு­யற்சி தொடர்­பான தக­வல்­க­ளை­ய­டுத்து எனது உயி­ருக்கு தற்­போது அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்­ளது. யார் மூலம் எனது உயி­ருக்கு ஆபத்து ஏற்­படப் போகி­றது என்­பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. பொலிஸ் பாதுகாப்புக் கோரி பொலிஸ் மா அதிபரிடம் என்னால் செல்ல முடியாது. நான் ஜனாதிபதியிடமே எனக்குப் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 
 ARA.Fareel

முஸ்லிம்களின் இனவாதி, அமித் வீர­சிங்கவை கைது செய்ய உதவியதால் -5 இலட்சம் வழங்கிய பொலிஸ் முஸ்லிம்களின் இனவாதி, அமித் வீர­சிங்கவை கைது செய்ய உதவியதால் -5 இலட்சம் வழங்கிய பொலிஸ் Reviewed by NEWS on September 18, 2018 Rating: 5