சற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....!

தேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்துக்கொண்டார்.  கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்வுக்கு கட்சியின் பொறுப்புக்கள் அனைத்திலிருந்தும் தாம் இராஜினமா செய்வதாக பதிவுத்தபால் மூலம் கடிதம் இன்று காலை அனுப்பி வைத்துள்ளார்

தேசிய காங்கிரஸின் ஸ்தாபர்களில் ஒருவரான உதுமாலெப்பை தலைவர் அதாவுல்லாவுடன் ஏற்பட்ட விரிசல் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. 

எம்.எஸ். உதுமாலெப்பையின் வெளியேற்றம் தேசிய காங்கிரஸில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உதுமாலெப்பையை கட்சியில் இருந்து வெளியேற விடாமல் தடுப்பதில் தலைவர் அதாவுல்லா இறுதி நேரத்தில் மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும் தோல்வி கண்ட நிலையில் இன்று காலை இந்த இராஜினாமா கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

உதுமாலெப்பையை தொடர்ந்து இந்த வாரம் கட்சியின் முக்கியஸ்தர்கள் அடுத்தடுத்து வெளியேறவுள்ளதாக சிலோன் முஸ்லிமுக்கு தெரிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...