சமூக ஆர்வலர் அப்துல் றசாக் காலமானார்; ஹக்கீம் உட்பட பலர் இரங்கல்
ஏறாவூரை பிறப்பிடமாகவும் லண்டன் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட சமூக ஆர்வலர் அப்துல் ரஸாக் அவர்களின் மரணச் செய்தி கேட்டு மிகவும் கவலையடைந்தேன். திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இளவயதில் ஏற்பட்ட அவரது மரணம் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு இழப்பாகும்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நீண்டகால உறுப்பினர்களில் ஒருவரான இவர், சமூகம் சார்ந்த செயற்பாடுகளில் தீவிர ஈடுபாடு காட்டிவந்தார். புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும், தாயக களநிலவரங்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் அடிக்கடி தனது ஆக்கபூர்வமாக கருத்துகளை பகிர்ந்துவந்தார்.
தாயக சமூகத்துக்காக குரல்கொடுக்கின்ற புலம்பெயர் முஸ்லிம்கள் மத்தியில் இவரது செயற்பாடு பெயர் குறிப்பிடத்தக்களவு இருந்துவந்தது. இதுதவிர, பல்வேறு அமைப்புகளில் இருந்துகொண்டும் தனது சமூகத்துக்காக இயன்ற உதவிகளை செய்துவந்துள்ளார்.
அன்னாரின் இழப்பை தாங்கிக்கொள்ளும் சக்தியை எல்லாம் வல்ல அல்லாஹ் அவரது மனைவி, மக்கள், குடும்பத்தினருக்கு கொடுக்கவேண்டும். அன்னாரின் நற்கருமங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு, மறுமை நாளின் ஜன்னத்துல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கம் கிடைக்க பிராத்திக்கிறேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...