BREAKING NEWS

Sep 10, 2018

முசார்ரபின் சமூகநலப்பணிகள் ஆரம்பம்; அலகுர்ஆன் பிரதிகள் வழங்கிவைத்தார்!


இர்சாத் ஜமால்

பொத்துவில் சிரியா பிரதேசத்தின் சுனாமி வீட்டுத்திட்டம் ஜெய்கா பகுதியில் கடந்த ஐந்து வருடங்களாக மூடப்பட்டிருந்த குர்;ஆன் மத்ரசா அ.இ.ம.காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் எம்.எம் முஷாரப் அவர்களினால் மீள் திறப்புச் செய்யப்ட்டு ஆரம்பிக்கபட்டது.
  2018.09.08ம் திகதி மாலை அ.இ.ம.காங்கிரஸின் வட்டார அமைப்பாளரும் சமூக சேவையாளருமான ஏ.எல் மனாப் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச அ.இ.ஜ.உலமா சபையின் தலைவர் மௌலவி ஆதம்லெப்பை, அனைத்துப் பள்ளிவாயல்களின் தலைவர் ஓய்வு பெற்ற அதிபர் சித்தீக், ஜனாஸா சங்கத்தலைவர் நயீம் எம்.எல்.டீ, அதன் செயலாளர்கள் மற்றும் பிரதேச கிராம நிலதாரி, ஏராளமானவர்களும் கலந்து கொண்டனர்.

' இங்கு இயங்கி வரும் ஜ}ம்மா பள்ளிவாயளுக்கு ஒரு மௌலவி இன்மையின் காரளணமாக அங்குள்ள மக்கள், சிறுவர்களும் தமது மார்க விடயங்களை நிறைவேற்றும் விடயத்திலும், குர்ஆன் ஓதுதலிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்பட்டனர்.  இவர்களது இந்நிலைக்கு முற்றுப் புள்ளியிடுவார் என்ற நம்பிக்கையில், சமூகச் செயற்பாட்டாளர் சகோதரர் முஷாரப்பை அனுகிய போது அதை செய்து முடித்துத்தருவதாக வாக்குறுதியளித்தார். இந்த மத்தரசாவினை ஆரம்பிப்பதற்கான வேலைகளில் ஈடுபட்ட போது மாற்றுக் கட்சிக்காரர்கள் பல இடஞ்சல்களை ஏற்படுத்தியதுடன், பல கஷ்டங்களுக்கு மத்தியில் நாம் அழைத்துவந்த மொளலவி அவர்களுக்கு தொலைபேசி ஊடாக, இந்தப் பிரதேசத்திற்கு வரக்கூடாதென பல அழுத்தங்களை கொடுத்ததாகவும் குறிப்பிட்டார். அரசியல் நோக்கங்களுக்கப்பால் ஏழைச் சிறார்களின், சமூகத்தின் கல்வி, அன்றாட வாழக்;கை மேம்பாட்டிற்கே இவ்வாறான நட்செயல்களை முன்னெடுக்கின்றோம். இப்படியான விஷமச் செயற்பாடுகளை மேற்கொள்பவர்களுக்கு எதிராக உலமாக்களாகிய நீங்கள் மிம்பர்ளை பயன்படுத்த வேண்டும் என உலமா சபையின் தலைவரை வேண்டிக் கொண்டார்.

சமூகச் செயற்பாட்டாளர் சகோதரர் முஷாரப் அரசியல் களம் புகுந்திருப்பதாக நான் அறிகிறேன். முஷாரப் என்பவர் பொத்துவில் மண்னுக்கு 'அ' கற்றுக் கொடுத்த கல்விக் குடும்ப பிண்ணனியை கொண்ட ஒருவர். அதன் காரணமாகவே தனது அரசியல் பயணத்தின் கன்னிச் சேவையினை கல்விக்கு வழங்கியுள்ளார் என அங்கு உரையாற்றிய பொத்துவில் ஜ.உ.சபையின் தலைவர் ஆதம்லெப்பை அவர்கள் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் ' நான் பல்வேறுபட்ட அரசியல் தலைவர்களோடு பலகியுள்ளேன். அவர்களிடத்தில் எமது பொத்துவில் மண் எதிர் நோக்குகின்ற பல பிரச்சினைகள் பற்றி கதைத்துள்ளேன். அது தொடர்பில் பல தொலை பேசி அழைப்பபுக்களையும் ஏற்படுத்தினேன். கிடைத்ததோ அல்லது நடந்ததோ ஒன்றுமில்லை. மக்களையும் எம்மையும் ஏமாற்றி அரசியல் செய்து வருகின்றனர். அப்படியான தலைவர்களை மிகவும் கட்சிதமாக இனம் கண்டிருக்கும் நான் அவர்களுக்கு சிறந்த பாடமொன்றை புகட்டுவதற்கு திடசந்தர்ப்பம் பூண்டுள்ளேன். இன்ஷா அல்லா, அல்லாஹ் என் ஆயுளை நீட்டிப் போடுவானாக இருந்தால் தம்பி முஷாரப் அவர்களின் அரசியல் பயணத்தில் அச்சாணியாக இருப்பேன். அவர் நமது மண்ணுக்கான சிறந்த அரசியல் தலைவர். அவருக்கு நீங்களும், நாமும் , நாம் எல்லோரும் கரம் கொடுக்க வேண்டும்' என மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

சிவில் சமூகப் போராட்டத்தில் வருபவர்கள் அரசியல் செயற்பாட்டடில் ஈடுபடக் கூடாது. அது ஒரு சாக்கடை என்ற மனோ நிலையில் நமது மக்கள் இருக்கின்றனர். அம்மனோ நிலையில் இருந்து நமது சமூகம்; மாற்றத்தைக் காணவேண்டும். அரிசியலை ஒரு சமூக சேவையாகவே நான் பார்க்கின்றேன். என அ.இ.ம.காங்கிரஸின் கிழக்கு இளைஞர் அமைப்பாளர் முஷாரப் அவர்கள் குறிப்பிட்டார். யானைகளின் அச்சத்திற்கு மத்தியில் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளும் இன்றி வாழ்ந்து வருகின்றீர்கள். உங்களை வைத்து அரசியல் அதிகாரம் பெற்றவர்கள் உங்களது அடிப்படைத் தேவைகளையும், நிலையினையும் மறந்து வாழ்கின்றனர். தேர்தல் காலங்களில் பல வாக்குறுதிகளை அள்ளி வீசிய அவர்கள் உங்கள் வீதிகளைக் கூட தரிசிக்க வரவில்லை. அவர்களைப் போன்று நானும் வாக்குறுதிகளை தந்துவிட்டுப்போகவும் வரவில்லை. பொத்துவிலான் என்ற வகையில் உங்களது அனைத்துத் தேவைகளையும் நான்றாக உணர்வோடு விளங்கி வைத்துள்ளேன். அவை அனைத்திற்குமான தீர்வினைப் பெற்றுத்தருவதில் நான் சலைத்துப் போய்விடமாட்டேன்.

உங்களுடைய சிறார்களின் அடிப்படை மார்க கல்வியான குர்ஆனை கற்றல் 5 வருடங்களாகக இடை நின்ற போது பல வேதனைப்பட்டிருப்பீர்கள். அது தொடர்பில் என்னிடம் நீங்கள் பேசவுமில்லை. மீள் அரம்பித்துத் தருகிறேன் என வாக்குறுதி அளிக்கவுமில்லை. ஆனால் இன்று உங்களின் தேவையும் உங்களின் சிறார்களின் தேவையையும் நிறைவேற்றித் தந்துள்ளேன். அல்ஹம்துலில்லாஹ். இதே போன்றுதான் உங்ளின் தேவைகளை நிவர்த்தி செய்து விட்டு அதை உங்களிடம் கையளித்துச் சென்றுவிட்டுச் செல்ல இன்னும் பல சந்தர்;ப்பங்களில் இந்த இடத்திற்கு உங்களை அழைப்பேன்;. உங்களுடைய சிறார்களை தொடர்ச்சியாக குர்ஆன் மத்ரசாவிற்கு அழைத்துவர வேண்டும். அவர்களின் ஓதல் மற்றும் கற்றலில் கண்டிப்பாக இருக்க வேண்டும் எனவும் பெற்றோர்களை வேண்டிக் கொண்டார்.
இன்நிகழ்வின் போது முஷாரப் அவர்களினால் பெற்றுக் கொள்ளப்பட்ட 70 மாணவ மாணவிகளுக்கான சீருடை, அல் குர்ஆன்களும்  வழங்கி வைக்கபட்டதுடன்,  பள்ளிவாயலுக்கான மௌலவியின் மாதாந்த வேதனம் 25000.00 இனை பொறுப்பேற்ற அவரினால் மௌலவி அப்துல் ஹய் ரஷாதீ அவர்கள் பேஷ் இமாமாக நியமிக்கப்பட்டார்.

அத்துடன் பொத்தவில் சிரியா பிரதேசத்தில் அ.இ.ம.காங்கிரஸினால் நிர்மாணிக்கப்பட்டுவரும் 50 வீட்டுத்திட்டத்தையும் பார்வையிட்டார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2014 Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA. Designed by | Distributed By