தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Sep 11, 2018

வாக்குறுதி மாறாத அன்சில் விட்டுக்கொடுத்த பதவி மு.காவிற்கு ஓர் உதாரணம்


பி. முஹாஜிரீன்

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு பாலமுனை மின்ஹாஜ் வட்டாரம் சார்பாக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புதிய உறுப்பினராக பாலமுனை 2ம் பிரிவைச் சேர்ந்த எச்.எம்.சிராஜ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக, தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர் எச்.எம். சிராஜின் பெயர் வெளியிடப்பட்ட அரச வர்த்தமானி அறிவித்தல் கடந்த வெள்ளிக்கிழமை (03) அம்பாறை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி திலின விக்ரமரத்னவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அண்மையில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக மின்ஹாஜ் வட்டாரத்தில் போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளைப் பெற்று தெரிவான, அட்டாளைசச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்சில் தனது உறுப்பினர் பதவியை அண்மையில் ராஜினாமாச் செய்திருந்தhர். இவரது வெற்றிடத்திற்கே பட்டியல் வேட்பாளராக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த எச்.எம்.சிராஜ் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.

பதவி விலகிய முன்னாள் தவிசாளர் எம்.ஏ.அன்சில் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிக்கமைவாகவே இவ்வாறு தனது பதவியை ராஜினாமாச் செய்தார். அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஒப்புதலுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளரினால் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிக்க அறிவிக்கப்பட்டு இப்புதிய உறுப்பினருக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

பிரதேச சபை உறுப்பினராக புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள எச்.எம்.சிராஜ் நாளை வியாழக்கிழமை (13) முதல் உத்தியோகபூர்வமாக சபை நடவடிக்கைகளில் கலந்துகொள்வதற்கான அழைப்பு அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் விடுக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages