கல்முனை நடராஜா வாய்க்கால் இன நல்லுறவின் சுவடு - அதிகம் பகிருங்கள்


 

ஏஎம். பறக்கத்துள்ளாஹ் - கல்முனை

அறிமுகம்
கல்முனையானது கிழக்கின் முகவெற்றிலை என்ற தலைமைத்துவ சிறப்பையூம் இந்நாட் டில் வாழும் முஸ்லிம்களின் மிக பெறுமானமிக்க தலைநகராகவூம் இருந்து வருகின்றது.

இது முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட  ஒரு நகரமாக இருந்த போதிலும் இங்கு தமிழ்இ கிறிஸ்தவம்இ சிங்களம் ஆகிய பல்லின மக்கள் வாழ்ந்துவருகின்றார்கள் என்பது இதன் சிறப்புக் களில் ஒன்றாகும்.
வடக்கே வர்த்தக கேந்திர நிலையங்கள்இ அரச அலுவலகங்கள்இ வங்கிகளையூம்: கிழக்கே கொடை களை வாரிவழங்கும் வங்கக் கடலையூம்: தெற்கே செறிவான முஸ்லிம் மக்கள் குடியிருப்புக் களையூம்: மேற்கே செல்வம் சொழிக்கும் விவசாயப் பூமியூம்இ புராதன நீர் வழிப் பாதையையூம் கொண்ட அழகிய ஒரு நகரமாகும்.
பிரிதத்hனியர் முதல் இன்று வரை கல்முனையின் எல்லைகளாக வடக்கே தாளவட்டுவான் வீதிஇ கிழக்கே கடல்இ தெற்கே சாய்ந்தமருதுஇ மேற்கே நற்பிட்டிமுனையையூம் எல்லைகளாகக் கொண்டுள் ளது. இதனுள் கல்முனைஇ கல்முனைக்குடி ஆகிய பிரதேசங்களையூம் பல்லின மக்களையூம் உள்ளடக் கியூள்ளது.

அமைவிடம்
பல்வேறு முக்கியத்துவங்களையூம் சிறப்புக்களை யூம் கொண்டுள்ள கல்முனையின் முஸ்லிம்கள் செறிவாக வாழும் பிரதேசத்தில் சுமார் அறுபது வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட ஒன்றே நடராஜா வாய்க்காலாகும்.

இது தற்பொழுது கல்முனைக்குடி 08 கிராமசேவ கர் பிரிவினுள் மஸ்ஜிதுல் ஹூதா ஜூம்ஆ பள்ளிவா சலுக்கு அருகில்இ பள்ளிவீதி மற்றும் பள்ளி ஒழுங்கை ஆகிய பாதைகளுக்கு மத்தியில் கடற்கரை வீதியை ஊடறுத்துச் செல்லும் ஒரு வாய்க்காலாகும்.

முக்கியத்துவம்
ஊரின் மத்திய வீதியானது ஆரம்ப காலங்களில்  கடற்கரை வீதியாக இருந்தது. இவ்வீதியிலிருந்து கடற்கரை வரையான பிரதேசம் காடுகளாகவூம்இ மணல் நிறைந்ததாகவூம்இ தென்னந் தோட்டங்களா கவூம் காணப்பட்டது.

இப்பிரதேசத்தில் வடக்குத் தெற்காக ஊடறுத் துச் செல்லும் 'யானை அரவம்" எனும் தாழ்வான பகுதி யில் மாரிகாலங்களில் ஏற்படும் வெள்ளம் ஊருக்குப் புறம்பாகக் காணப்பட்ட பொண்டுகள் தொடுவாய்இ தாளைத்தொடுவாய்இ கிண்ணையடித் தொடுவாய் போன்ற நீர் தங்கு பகுதிகளில் ஒன்று சேர்ந்தன.

இவ்வெள்ளநீர் கடலுக்குள் செல்ல வழியின்றி தற்போதய அலியார் வீதி முதல் சாஹிபு வீதி வரை யான கடலை அண்டிய பிரதேசம் குளம்போல் காட்சியளித்தன. இவ்வெள்ள நீர் வற்றுவதற்கு சில மாதங்கள் செல்லும்.

மாரிகாலம் முடிந்த பின்னரும் இந்நீரில் பெருகும் தவளைகளின் சத்தம் இரவில் ஊர் முழுக்க வாத்தியங்கள் இசைப்பது போன்று ஒலித்துக் கொண்டிருக்கும். இது இப்பிரதேச மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதோடுஇ நுளம்புகள் பெருகி தொற்று நோய்களையூம் ஏற்ப டுத்தின.
வெள்ளநீர் வடிந்தோட வடிகாண்கள் அற்ற அக்காலத்தில் தெருக்களும்இ ஒழுங்கைகளும் ஓடை களாகவூம்இ வீடுகலெல்லாம் குளங்களாகவூம் மாறி விடுகின்றன.

இவ்வெள்ள நீரை வெளியேற்றுவதில் ஊர் மக்களுக்குள் வாய்த்தர்க்கம் ஆரம்பித்து சண்டையில் முடிவதுமுண்டு.
இவ்வாறான சூழ்நிலையில் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் கிராமத் தலைவர்கள் பெரும் சிரமத்துடன் நடுநிலையாக நின்று செயற்பட்டு வந்தனர்.

#தீர்வூ
வருடந்தோரும் பெய்யூம் பருவமழையினால் வெள்ளம் தேங்கி மக்களுக்கு பல அசௌகரி யங்களை ஏற்படுத்தின. இதற்கு நிரந்தர தீர்வூ காணும் பொருட்டு அப்போதைய கல்முனைக்குடி 03 கிராமத் தலைவர் மு.இ. உதுமாலெப்பை அவர்களும்இ கல்முனை 5ம் வட்டார கல்முனை பட்டின சபை உறுப்பினர் எஸ்.எம். யாஸின் உள்ளிட்டோர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். காரியப்பர் அவர்களின் உதவியை நாடினர்.

மக்களின் பிரதான பிரச்சினையாக இருந்து வந்த இதனை எம்.எஸ். காரியப்பர் அவர்கள் ஏற்றுக் கொண்டு கல்முனை பிரதேச இறைவரி உத்தியோகத் தர் எம். நடராஜா அவர்களிடம் எடுத்துரைத்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பணித்தார்.

#பஞ்ச நிவாரண வேலைத்திட்டம்
மழைவீழ்ச்சிகுன்றி நீர்நிலைகளும்இ குளங்களும்இ ஓடைகளும் வரண்டுஇ விவசாயிகள் வாழ் விழந்து நிற்கும் காலத்தில் 'பஞ்ச நிவாரண வேலைத் திட்டம்" எனும் வேலைத்திட்ம் அக்கால அரசினால் முன்னெடுக்கப் பட்டது.

வரட்சி காரணமாக மக்களுக்கு பஞ்சம் ஏற்பட்டு உணவூக்கு கஷ்டப்படும் முக்கிய வேளையி;ல் அப்பிரதேசங்களில் காணப்படும் வேலைகளை அடையாளங்கண்டு அவற்றை செய்து முடிப்பதற்கு நாள்கூலிகளுக்கு மக்களை வேலைக்கமர்த்தும் முறை அப்போது காணப்பட்டது.

கூலிகள் பணமாகவூம்இ அத்தியவசியப் பொருட்கள் துணிகள் பெற்றுக் கொள்ளும் முத்திரை (கூப்பன்) மூலம் வழங்கப்பட்டு வந்தது.

இவ்வாய்க்கால் வெட்டும் பணியில் ஈடுபடும் மக்களுக்கு நாள் சம்பம் வழங்காமல் அவர்களுக்கு வேலைகளுக்குரிய கூடிய கூலிகளை பெற்றுக் கொடு ப்பதற்கான ஆலோசனைகளை எம்.எஸ். காரியப்பர் அவர்கள் அரசுக்கு எடுத்துக் கூறி அதனை சாத்திய மாக்கினார்.

எம்.எஸ். காரியப்பரின் இம்முயற்சிக்கு நடராஜா அவர் களும் ஒத்துவழைப்பு வழங்கியதன் பலனான கூடுதலான வருமானத்தை மக்களுக்கு பெற்றுக் கொடுத்ததோடு மேலதிகமான வேலை களையூம் பெற்றுக் கொண்டனர்.

நிர்மாணம்
மழைவீழ்ச்சி  குறைவடைந்து வரட்சியூம் பாரிய பஞ்சமும்; 1949ம் ஆண்டின் நடுப்பகுதியில் இப்பிரதே சத்து குளங்கள் வற்றி வயல்வெளிக லெல்லம் வரண்டு போயின.

இவ்வாறான சூழலில் மக்களுக்கு உதவி செய்வத னூடாக இப்பிரதேசத்து மக்களின் நீண்ட கால பிரச் சினையை தீர்த்து வைப்பதற்கு எம்.எஸ். காரியப்பர் அவர்கள் பஞ்ச நிவாரண வேலைத்திட் டத்தை நடைமுறைப்படுத்தினார். 

வெள்ளநீரை கடலில் சேர்க்கும் வகையில் வாய்க்கால் வெட்டும் பணிகள் ஆரம்பிக்கப் பட்டன. இதற்கு இப்பிரதேச மக்கள் ஒன்று சேர்க்கப்பட்டு அவர்களிடத்தில் வேலை பெறு வதற்கும்இ திட்டங்களை வகுப்பதற்குமாக இறைவரி உத்தியோகத்தர் நடராஜா அவர்களின் தலையில் கிராம அதிகாரிகள்இ ஓவசியர்இ கங்காணி போன்றவர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது.
சுமார் 30 அடி அகலம் கொண்ட நீண்ட வாய்க்கால் ஒன்று வெள்ள நீர் கடலை சென்றடை யூம் வகையில் வெட்டப்பட்டது. பல வாரங்கள் இப்பணி நடைபெற் றது. இவ்வொய்க்கால் வெட்டும் மணல்களைக் கொண்டு தாழ்வான பிரதேசங்கள் நிரப்பப்பட்டது. சிறிய ஒழுங்கைகள் பாதைகளாக மாற்றம் பெற்றன.

இவ்வாய்க்கால் வெட்டும் போது கலைப்பைப் மறந்து வேலை செய்த மக்கள் அவர்களின் கவிப் புலனை வெளிக்காட்டினர். அவர்கள் வாய்கால் வெட்டும் பாடல் பின்னவருமாறு அமைந்தது.

அதியாரி அளந்து போட்ட
பத்துப் பாக வாய்க்கால
வெட்டினால் தான் பொடியா
நம்மட வடிச்சலோடும்டா

இப்பணிகளை மேற்பார்வை செய்யூம் ஓவசியர்களாக முன்னாள் அதிபர் எஸ். ஆதம்பாவா மற்றும் எஸ்.எம். இஸ்மாயில் ஆகியோர் கடமையாற்றினர்.

திறப்பு விழா
இவ்வாய்க்கால் திறந்து வைக்கும் நிகழ்வூ 1949இல் வெகுவிமர்சையாக இடம்பெற்றது. இந்நிகழ்வூக்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். காரியப்பர் அவர்களும்இ கௌரவ அதிதியாக பட்டின சபை தவிசாளர் எம்.எம். இஸ்மாயில் காரியப்பர் அவர்களும் பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதி அவர்கள் உரையாற் றும்போது இப்பிரதேச மக்களின் நீண்ட கால பிரச்சினையாக இருந்து வந்த வெள்ளத்தை வடிந்தேட உதவிசெய்து மக்கள் துயர் தீர்த்து வைக்க பாடுபட்ட நடராஜா னுசுழு அவர்களுடைய பெயரை இவ்வாய்க் காலுக்கு சூட்டுவோம் என்றார்.

நடராஜா
திரு. எம். நடராஜா அவர்கள் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். இலங்கை நிருவாக முறைமையில் வன்னிமைகளின் நிருவாக முறைமை ஒழிக்கப்பட்ட பின்னர் பிரதேச இறைவரி உத்தியோ கத்தர் னுசுழு  முறைமை 1946இல் நடைமுறைக்கு வந்தது.
கல்முனையின் முதலாவது னுசுழு ஆக எம். நடராஜா அவர்கள் நியமிக்கப்பட்டார். இவ்வலுவலகம் மணற் சேனை ஜோசப் என்பவரின் வீட்டில் அமைந்திருந் தது.
நடராஜா அவர்கள் பதவி வகித்த காலங்களில் இன மத பேதங்கள் இல்லாமல் பராட்டத்தக்க சேவைகளை புரிந்தார்

#இன ஒற்றுமை
கல்முனையைப் பொருத்தவரையில் இன்று பிரதேச ரீதியானஇ இனரீதியான கொதிநிலையில் இருந்து வருகின்றது. இது இப்பிரதேசத்தில் கடந்த காலங் களில் ஏற்பட்ட பல்வேறு இன மற்றும் பிரதேச ரீதியா ன மோதல்கள்இ யூத்தங்களுக்கும் தன்னை ஈடுகொடுக்க பழக்கிக் கொண்டுள்ளது.
முப்பது வருட யூத்த சூழல் காரணமாக தமிழ் முஸ்லிம் மக்களிடையே கட்டிக்காத்து வந்த நல்லுற வில் பல கீறள்கள் ஏற்பட்ட போதிலும் நடராஜா வாய்க்காய் அவ்வாறான தாக்கங்களுக்கு உட்பட வில்லை எனலாம்.
முழுக்க முழுக்க முஸ்லிம்கள் சொறிந்து வாழும் ஒரு பிரதேசத்தின் மத்தியில் காணப்படும் ஒரு வாய்க்கால் நடராஜா எனும் தமிழ் மகன் ஒருவரின் பெயர் தங்கி நிற்பதை கல்முனை முஸ்லிம்கள் கௌரவ மாகவே கருதுகின்றனர்.

அரசியல்வாதிகள் மக்களுக்குச் செய்யூம் பல பணிகள் அதிகாரிகளைக் கொண்டே முன்னெத் துச் செல்லப்படுகின்றன. அதற்காக அரசியல் வாதிகள் அவ் அதிகாரிகளின் பெயர்களை சூட்டும் நடைமுறை என்பதும் இல்லையென்றே சொல்ல முடியூம்.

இவ்வாறான நிலையில் தமது பணிப்புரையை ஏற்று தனது மக்களின் குறைகளை தீர்த்து வைத்த பிரதேச இறைவரி உத்தியோகத்தர் நடராஜாவை கௌரவப்படுத்தும் வகையில் அவரது பெயர் சூட்டப்பட்டது.

இப்பெரும் காரியத்தைச் செய்து காட்டிய எம்.எஸ். காரியப்பர் அவர்கள் தமிழ் மக்கள் மீதும்இ சமூகங்களின் நல்லிணக்கம் குறித்தும் அவர்கள் கொண்டிருந்த அக்கரையை நிரூபித்துக் காட்டி யூள்ளார்.

முடிவூரை
தமிழ்-முஸ்லிம் ஒற்றுமையின் சுவடாக இருந்து வரும் நடராஜா வாய்க்கால் வங்கப் பெருங்கடலில் இணைவதனூடாக இப்பிரதேசத்தில் இருந்த பிரச்சினைகள்இ கசப்புணர்புகள் வடிந்தோட வழியேற்படுத்தப்பட்டன.

இதேபோல் இன நல்லுறவூகள் தொடர்பாக கல்முனைப் பிரதேசத்தில் பல விடயங்கள் காணப் பட்டாலும் அவை அரசியல் சூழ்ச்சிகளுக்குச் அடித்துச் செல்ப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

சமூக நல்லுணவை கட்டியெழுப்பக் கூடிய விடயங்கள் மீள வாசிப்புக்குட்படுத்தப்படுவதன் ஊடாக சமூகங்களின் நல்லுறவில் புதிய அத்தியா யங்களை தோற்றுவிக்கலாம் என நம்புகின்றேன்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்