புத்தளத்தில் மக்கள் போராட்டம் - கவனிப்பார்களா முஸ்லிம் தலைவர்கள்?

புத்தளம் – அருவக்காடு கழிவகற்றல் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் இன்று (19) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 கொழும்புக் கழிவுகளை புத்தளம் அறுவாக்காட்டிற்கு கொண்டு சென்று முகாமை செய்வதற்கான பாரிய வேலைத் திட்டத்தை 105 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டுடன் பாரிய நகர அபிவிருத்தி அமைச்சு மேற்கொண்டு வருகிறது ஒருநாளைக்கு கொழும்பிலிருந்து சுமார் 1200 மெற்றிக் டொன் கழிவுகளை புகையிரதம் மூலம் அங்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் துரிதப் படுத்தப் பட்டு வருகின்றன, மேற்படி கழிவு முகாமை செயற்திட்டத்தை சீனா ஹார்பர் எனும் ஒரு சீன நிறுவனம் மேற்கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளமையால் புத்தளம் பிரதேசம் ஆரோக்கியமற்றதாக அமையும் எனக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

குறித்த திட்டத்தினால் மக்கள் பாதிக்கப்படுகின்றது ஆனால் இது  குறித்து அரசியல்வாதிகள் கவனம் செலுத்துவன் மூலம் இதற்கான தீர்வினை பெற முடியும் எனவும் அரசு இதனை உடனடியாக நிறுத்த முஸ்லிம் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோருகின்றனர். 

குறித்த இவ் ஆர்ப்பாட்டத்தில் 2000 ற்கும் மேற்பட்ட மக்களுடன் அரசியல் பிரமுகர்களும் இணைந்துகொண்டனர். 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...