உதுமாலெப்பை மீண்டும் அதாவுடன்...! முரண்பாடுகள் முடிவு பெற்றது..?

சிரேஷ்ட அரசியல்வாதியான எம்.எஸ் உதுமாலெவ்வை அவர்கள் தேசிய காங்கிரஸின் முக்கிய பொறுப்புகளிலிருந்து அண்மையில் இராஜினாமா செய்திருந்தார். இதனையடுத்து எழுந்த நிலைமைகள் தொடர்பில் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான கௌரவ ஏ.எல்.எம். அதாவுல்லாஹ், எம்.எஸ் உதுமாலெவ்வை மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் இன்று (25) கூடி ஆராய்ந்தனர்.

இதன்போது, முரண்பாடு காணப்பட்ட விடயங்களுக்கு தீர்வு காணவும் எதிர்காலத்தில் ஐக்கியமாகச் செயற்படவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எம்.எஸ். உதுமாலெவ்வை அவர்கள் இராஜினாமாச் செய்த பதவிகளை மீண்டும் அவரே வகிக்க வேண்டுமென விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், தான் இராஜினாமாச் செய்த பதவிகளை மீண்டும் பொறுப்பேற்பதாக உதுமாலெவ்வை அவர்கள் உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பில் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான கௌரவ ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் அவர்களை நான் சற்று நேரத்துக்கு முன்னர் தொடர்பு கேட்ட போது அனைத்தையும் உறுதிப்படுத்தினார்

(ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)
உதுமாலெப்பை மீண்டும் அதாவுடன்...! முரண்பாடுகள் முடிவு பெற்றது..? உதுமாலெப்பை மீண்டும் அதாவுடன்...! முரண்பாடுகள் முடிவு பெற்றது..? Reviewed by NEWS on September 26, 2018 Rating: 5