மத்ரஸாக்களில் உலகக்கல்வி


2018.08.31 ம் திகதி வெளிவந்த வர்த்தமானி பத்திரிகையில் இனமத பேதமின்றி தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளுக்கு சமயப் பாடத்திற்கு ஆசிரியர்கள் இணைத்துக்கொள்வது பற்றிய அறிவிப்பு வெளிவந்தது.

அந்த அறிவிப்பில் “கல்வித்தகைமை” கீழ் இருந்த விடயங்களை முஸ்லிம் சமூகத்துடன் ஒப்புநோக்கியபோது சமூகத்திற்க்கான தொழில் வாய்ப்புக்கள் பற்றி எதிர்மறையான எண்ணங்கள் உதித்தது.

5. கல்வித்தகைமை
5.1 இலங்கை ஆசிரியர் சேவைப் பிராமணக் குறிப்பு 6 இன் படி கல்வி பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில் சிங்கள மொழி அல்லது தமிழ் மொழியைப் பாடமாகச் சித்தியடைந்து இருக்க வேண்டும்.
5.2 க.பொ.த. (உ.த) பரீட்சையில் குறைந்தபட்சம் மூன்று பாடங்கள் (பொது சாதாரண பரீட்சை மற்றும் பொது ஆங்கிலம் தவிர) ஒரே தடவையில் சித்தியடைந்திருக்க வேண்டும்.
5.3 மேற்கூறப்பட்ட தகமைகளுக்கு மேலதிகமாக விண்ணப்பம் கோரும் இறுதித் திகதியான 2018.09.28 ஆம் திகதி கீழ்க் குறிப்பிடப்பட்ட தகமைகளைப் பூரணப்படுத்தி இருக்க வேண்டும்
(அ) பௌத்த சமயப் படத்திற்காக பௌத்த தர்மாசிரியர் பரீட்சையில்  சித்தியடைந்திருத்தல்
(ஆ) கத்தோலிக்க சமயப் படத்திற்காக கத்தோலிக்க தர்மாசிரியர் பரீட்சையில்  சித்தியடைந்திருத்தல்
(இ) கிறிஸ்தவ  சமயப் படத்திற்காக கிறிஸ்தவ அறிவு தொடர்பான தேசிய சான்றிதழ் பரீட்சையில்  சித்தியடைந்திருத்தல்
(ஈ) இந்து சமயப் படத்திற்காக இந்து தர்மாசிரியர் பரீட்சையில்  சித்தியடைந்திருத்தல்
(உ) இஸ்லாம் சமயப் படத்திற்காக மௌலவி சான்றிதழ் பெற்றிருத்தல்

இலங்கையில் உள்ள சமயக் கல்லூரிகளில் (மத்ரஸா, பிரிவென,  இந்து சமய அறநெறிப் பாடசாலை) கற்று வெளியேறுகின்ற மதகுருமார்களுக்கு அரச தொழில்வாய்ப்பை வழங்கும் விதமாகத்தான் சமயப் பாட ஆசிரியருக்கான தகைமைகள் வடிவமைக்கப்பட்டது. இதனால் ஆரம்பத்தில் மௌலவி பட்டம் மற்றும் பெற்ற பலருக்கு அன்று ஆசிரிய தொழில்வாய்ப்பு கிடைத்தது. என்றாலும் இன்று இதற்கு மேலதிகமாக சமயப் பாட ஆசிரியர்களுக்கான “கல்வித் தகைமை”களாக சாதாரண தரப்பரீட்சை மற்றும் உயர் தரப்பரீட்சை என்பவற்றில் சித்தியடைந்து இருக்க வேண்டும் என்று இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
என்றாலும் இன்று பல பிரபல்யமான அரபு மத்ரஸாக்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு சாதாரணதரம், உயர்தர பரீட்சை எழுதுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுப்பதில்லை. இதற்கு மேலதிகமாக உலகக்கல்வி தேவையில்லை என்ற பிரசாரமும் சமூகத்தில் நடக்குது. எதிர் பக்கம் ஷியாக்கள் சர்வதேச பல்கலைக்கழகம் உருவாக்கி இஸ்லாமிய கற்கை நெறிக்கான பட்டதாரி சான்றிதழை வழங்குகின்றனர். இதனால் முஸ்லிம் சமூகம் பல இன்னல்களை எதிர்நோக்கவுள்ளது.
எதிர்காலத்தில் குறித்த சமயப் பாடநெறிக்கு விண்ணப்பிப்பவர்களில் ஷியா சிந்தனையுள்ளவர்களும் இடம்பெறவுள்ளனர். அவர்களுக்கு பட்டதாரி சான்றிதழ் உள்ளதால் இலகுவாக அருகிலுள்ள சிறந்த பாடசாலைக்கு அவர்களை ஆசிரியர்களாக நியமிக்கப்படலாம். இங்கு ஷியாக்களின் அடுத்த கட்ட நடவடிக்கை கட்டிளமை பருவ பாடசலை மாணவர்களுக்கு ஷியா சிந்தனையை போதிப்பதிலும் அவர்கள் வெற்றியடைவார்கள். இதனால் எமது 3வது பரம்பரையில் ஷியா சிந்தனையுள்ளோர் அதிகரிக்கலாம்.
இலங்கையில் இன்று வேலையின்மை வீதம் அதிகரித்த வண்ணமுள்ளது. இந்த பிரச்சினையில் பல மௌலவிமாரும் இன்று சிக்கியுள்ளமை மறுக்க முடியாத உண்மையாகும். இந்நிலையில் இலங்கையில் உள்ள மத்ரஸாக்களில் சாதாரணதரம், உயர்தரம் கற்காமல் மௌலவி பட்டம் மாத்திரம் பெற்று வெளியேறுகின்ற ஆலிம்களுக்கு அரசதுறையில் தொழில்வாய்ப்புக்கள் இல்லாமல் போகலாம்.
உலமாக்களே! நமக்கு அரச தொழில்வாய்ப்பு தேவையில்லை என்று இதனை புறக்கணிக்கவும் வேண்டாம். இதனால் பாதிக்கவுள்ளது எமது இளம் சமூகம் என்பதையும் மறக்க வேண்டாம்.
எனவே, எதிர்கால சமூகத்தை ஷியா சிந்தனையில் இருந்து காப்பதற்கும், ஆலிம்களுக்கான அரச தொழில்வாய்ப்பை உறுதி செய்து கொள்ளவும் இன்றே அணைத்து மத்ரஸாக்களிலும் சாதாரணதரம், உயர்தர பரீட்சைகளில் தோற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கவும்.

மத்ரஸாக்களில் உலகக்கல்வி மத்ரஸாக்களில் உலகக்கல்வி Reviewed by NEWS on September 02, 2018 Rating: 5