தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Sep 4, 2018

புதிய முறையில் தேர்தல் நடந்தால் ’சிறுபான்மையினருக்கு துரோகம்’ - அதாஉல்லாரீ.கே.றஹ்மத்துல்லா
புதிய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் முற்படுமாயின், அது, சிறுபான்மை மக்களுக்கு அரசாங்கம் செய்யும் மிகப்பெரிய துரோகம் என்று, முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.
அக்கரைப்பற்று கிழக்குவாசலில்,  நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், "நல்லாட்சி அரசாங்கம் என்று கூறிக்கொண்டு வந்த ஆட்சிக்கு, முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள், நாடாளுமன்றத்தில் கைகளை உயர்த்தியமையாலேயே, இந்தத் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது. இது, சிறுபான்மை மக்களின் அரசியல் பலத்தையும் குறைக்கச் செய்வதாக அமைகின்றது" என்று தெரிவித்தார்.
மாகாண சபை தேர்தல் வருவதற்கு முன்னர், ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் முற்படுகின்றது என்று குற்றஞ்சாட்டிய அவர், இவையனைத்துக்கும் முன்னதாக, நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவேண்டும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages