நாளை தேசிய சுனாமி ஒத்திகை - அம்பாறை கரையோர பிரதேசங்களில்...!தேசிய சுனாமி தினத்தை முன்னிட்டு, அம்பாறை மாவட்டத்தின் தேசிய சுனாமி ஒத்திகையின் பிரதான நிகழ்வு, நாளை  (05) காலை 8.30 மணி முதல், நிந்தவூர் பிரதேச செயலகப் பிரிவில் நடைபெறவுள்ளது.
நிந்தவூர், பிரதேச செயலாளர் ரி.எம்.எம்.அன்சார் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட செயலாளர் டி.எம்.எல். பண்டாரநாயக்க, அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் பிரதானிகள், உயரதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர். இம்முறை, அம்பாறை, காலி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில், இவ்வொத்திகைகள் இடம்பெறவுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...