“தலைவரின் கட்சி மாத்திரமே இன்னும் சமூக மாற்றத்தை நோக்கி செல்லவில்லை ” ஹசன் அலி

(இறம்ளார் எம் ஹாரிப்)

பெருந்தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப் இவ்வுலகை நீத்த 18 வது வருடத்தினை, எம்.எச்.எம்.அஸ்ரப் மாவத்தையில் அமைந்துள்ள மஸ்ஜிதின் நூர் பள்ளிவாசலில், 2018 .09 .16 ஞாயிற்றுக்கிழமை மஹ்ரிப் தொழுகையினைத் தொடர்ந்து, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் ஏற்பாட்டில் செயலாளர் நாயகமும், மர்ஹும் அஸ்ரபின் உற்ற நண்பனுமாகிய எம்.டி ஹஸனலியில் தலைமையில் மர்ஹும் அஸ்ரபின் ஞாபகார்த்த நிகழ்வு  இடம்பெற்றது.

தலைமைத்துவம் என்றால் அஷ்ரப், அஸ்ரப் என்றால் தலைமைத்துவம் எனும் கருப் பொருளில் எமது சமூகத்துக்கு மர்ஹும் அஷ்ரபினைப் போன்ற ஆளுமையுள்ள இன்னொரு தலைமைத்துவம் உருவாகாமல் போனது எமது துரதிஷ்டம் என்றுதான் கூறவேண்டும், நாங்கள் இதை போன்ற ஒரு தலைமைத்துவத்தினை உருவாக்க பல தியாகங்களை, பிராயச்சித்தங்களை மேற்கொண்டும், அட்டை அது போகும் சருகுக்குள்ளேயே சென்றதே தவிர சமூகமெனும் மெத்தையில் அது இருக்க வில்லை. ஏனைய கட்சிகளில் மக்களின் நலன் கருதி தலைமைகள் மாற்றமடைந்து கொண்டே செல்கிறது, ஆனால் மர்ஹும் அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட கட்சியினைத் தவிர, எமது சமூகத்தில் காணப்படுகின்ற பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கக் கூடியவகையில் சமுதாயத்துக்கு மனமாற்றங்கள் வரவேண்டும் அல்லது தலைமைத்துவத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படல் வேண்டும். 

எதுவென்றாலும் இதனை மக்களே செய்ய வேண்டியுள்ளது எனும் தொனிப் பொருளில் அமையப்பெற்ற பஷீர் சேகுதாக்குதின் பேச்சினைத் தொடர்ந்து பள்ளிவாசல் இமாம் அஸ்மிர் மௌலவியினால் மர்ஹும் அஷ்ரப் மரணமடைவதற்கு முன் இறுதி ஜூம்ஆ அவர் வழமையாக தொழும் இப்பள்ளியிலேயே தொழுதார் என்பது பற்றிய பல தகவல்களை வழங்கியதுடன் மத்ரஸா மாணவர்களால் குர்ஆன் ஓதப்பட்டு, அன்னாருக்காக துஆ பிரார்த்தனையும் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதித் தலைவர் நஸார் ஹாஜியார், கலீல் ரகுமான் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களான காதர், பின்காஸ் மற்றும் ஏனைய முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தனர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...